புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 
காதோடு காதாக...

காதோடு காதாக...

* சபாஷ், சரியான போட்டி

தொலைக்காட்சி விவாதத்திற்கு வர முடியுமா? தைரியம் இருக்கா? என்று செந்தில் தொண்டமான் கேட்ட கையோடு இன்று மாலை வேண்டுமானாலும் வருகிறேன், நான் தைரியமானவன் எண்டு பிரபா எம்.பி. தெரிவித்திருக்கிறார். இதை இதோடு விட்டுவிடக் கூடாது. சவால் விட்டா விட்டவர் ஏற்றுக்கொண்டு அமுல்படுத்த வேண்டும். பொறுத்திருந்து பார்ப்பம் என்ன நடக்குதெண்டு?

* சம்பந்தன் ஐயாவின் துணிச்சல்

இதுவரை அரசை எதிர்த்துக் கதைப்பதிலே துணிச்சலைக் காட்டி வந்த சம்பந்தன் ஐயா கடந்த வாரம் அரசைப் பாராட்டி அறிக்கை விட்டும் தனது துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். பெரிதாக யோசிக்க வேண்டாம். அவர் அரசைப் பாராட்டிப் பேசிவிட்டும் ஏனைய தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்களுடன் பயமில்லாமல் சிரித்துப் பேசிவருவதை துணிச்சல் எண்டுதானே சொல்ல வேண்டும்.

* அறிக்கை அண்ணாவின் கெட்டித்தனம்

கொழும்பில வெள்ளியன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில கலந்துகொண்ட சனத்தில அரைவாசிப்பேர் கோட்டையில் ரயில் ஏறவும், பஸ் ஏற நின்றவர்களுமே. இவையிரண்டையும் உள்ளே வரவிடாமல் மறித்தமையால் என்ன நடக்கு எண்டு விடுப்புப் பார்க்க வந்த சனம்தான் அது. இதுக்குள்ள நம்ம அறிக்கை அண்ணாவும் ஏழுபேருடன் புகுந்து தன்ர காரியத்தைச் சாதித்து விட்டார். என்ன ‘பிa பப்ளிசிட்டி’ தான்.

* தனது முயற்சியில் எள்ளளவும் சளைக்காதவர்

முஸ்லிம் காங்கிரஸை விமர்சிக்காது விட்டால் ஒருவருக்கு தூக்கமே வராதாம். எந்தக் கோணத்தில் விமர்சன அறிக்கை விடலாம் எண்டு யோசிப்பது தானாம் இவரது அண்மைக்கால முழு நேரத் தொழில். ஒரு கட்சியின் பிரசார செயலாளரான இவர் ஊடகங்களுக்கு தினமும் ஒரு அறிக்கையை அனுப்பிவிட்டுத்தான் சாப்பாடு, தூக்கம். அது வெளியாகுதோ இல்லையோ இவர் மட்டும் தனது செய்தொழிலில் எள்ளளவும் சளைப்பதே இல்லை.

* மரத்திலிருந்து குதிரைக்கு பாய்ச்சல்

முஸ்லிம் மக்களின் பிரதான கட்சி எனக் கூறிவரும் மரக் கட்சியின் அதிமுக்கிய உறுப்பினராக நேற்றுவரை இருந்த கிழக்கின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று முதல் தேசிய காங்கிரஸில் இணையவுள்ளதாக தெரிய வருகிறது. நேற்றுமாலை அமைச்சர் அதாவுல்லாவுடன் இரகசியமாக பேசிய அவர் இன்று தனது முடிவைப் பரகசியப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மரத்தில் ஆற அமர இருந்தவர் இனி குதிரையில் பாய்ந்தோடப் போகிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.