புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

சுதந்திரதேவி சிலை

சுதந்திரதேவி சிலை

நண்பர்கள் இடையே ஒருவருக்கு ஒருவர் தமது அன்பை வெளிப்படுத்தும் முகமாக பரிசு கொடுப்பது வழக்கம். ஆனால் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு நட்புக்கு அடையாளமாக பரிசு கொடுத்திருக்கிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூற்றாண்டுகள் ஆனதையொட்டி பிரான்ஸ் கொடுத்த பரிசுதான் சுதந்திர தேவி சிலை. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் இருக்கிறது.

கிபர்ட்டி தீவு இந்த தீவில்தான் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான இச்சிலை உலக அதிசயமாக உள்ளது. இச்சிலை பிரான்சால் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி அமெரிக்க மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இச்சிலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது. இவ்வேழு முனை 7 கண்டங்க ளையும் 7 கடல்களையும் குறிக்கிறது. இக்கிரீடத்தில் 25 ஜன்னல்கள் உள்ளன. இச்சிலை அமெரிக்காவின் மிக முக்கிய அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர். லுஷாந்தினி

புனித தோமையாளர் பெண்கள்

பாடசாலை, மாத்தளை

எனது செல்லப்பிராணி

எனது செல்லப்பிராணி நாய் நான். அதை பப்பி என செல்ல மாக அழைப்பேன். நானும் பப்பியும் மாலையானதும் விளையாடுவோம். தினந்தோறும் அதற்கு இறைச்சியை மறவாமல் கொடுத்துவிடுவேன். நான் வீட்டை விட்டு வெளி யேறும் போது வாசல் வரைவந்து வாலையாட்டி வழியனுப்பி வைக்கும். என் பப்பி வீட்டுக் காவலனாகவும் உயிர்த் தோழனாகவும் பணிபுரிகின்றது.

எம். என். முஜாஸா

தரம் 06 ஏ, மறை / ஸதாத் மகா வித்தியாலயம்,

கொடபிட்டிய,

அகுறஸ்ஸ

நடராஜர் சிலை

சிவ வடிவம் என அழைக்கப்படும் நடராஜ மூர்த்தி சைவ சமயத்தின்படி பிரபஞ்சத்தின் தன்மையை வெளிப்படுத்தும் சிறப்பு மிக்க ஆக்கமொன்றாகக் கருதப்படுகின்றது. இச்சிலை மூலமாகப் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச விருத்தியங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. சிவனுக்கு கைகள் நான்கு இடது கையில் உடுக்கை, அது படைத்தலைக் காட்டுகின்றது.

வலக்கையில் அக்கினி அது அழித்தலைக் குறிக்கின்றது. இடக்கையின் அபய முத்திரை காத்தாலைக் குறிக்கின்றது. வலக்கையினால் காட்டப்படும் சின் முத்திரை அருளைக் காட்டுகின்றது. இடக்காலினால் வாமன வடிவுடைய முயல்களை மிதித்திருக்கின்றார்கள். இது மறைத்தலைக் குறிக்கின்றது. கழுத்து மாலை பூனூல் தரித்திருக்கின்றார். இடுப்பில் அதை நான் முத்தரீயம் நடன வேகத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த அபிநயங்களுடனும் ஆபரணங்களுடனும் அலங்கரிக்கப் பெற்று நெருப்பின் மத்தியில் சிவன் ஆடுகிறான். ‘திரு வாசி’ என்று அழைக்கப்படும் சோதிப் பிளம்பு வட்டம் இயற்கையைப் பிரதிபலித்துக் காட்டுகின்றது.
 

ஏ. ஆர். மர்யம் ஜமீலா

தரம் 09, நாங்கள்ள மு. ம. வி., நாங்கள்ள

 

பாற் கஞ்சி

அம்மா செய்வாள் பாற் கஞ்சி
ஆகா அமுதம் அதுவன்றோ
பருகப்பருக கற்கண்டுப்
பாகாய் சுவைக்கும் பாற்கஞ்சி!

சிவத்தைப் பச்சை அரிசிக்குள்
சிவக்க வறுத்த பயறிட்டு
நீரை அளவாய் விட்டவித்து
நிறையப் பாலும் அதில் விடுவாள்!

கணக்காய் உப்பும் அதிற்சேர்த்து
காய்ச்சி எடுக்கும் பாற்கஞ்சி
அம்மா செய்தால் மட்டுமே
ஆகா ஓகோ என இனிக்கும்!

ஏழை குடிக்கும் கஞ்சியென
இதனை எண்ணிச் சிரிக்காதே
ஊட்டச் சத்தும் உடன் செமிக்கும்
உயர்ந்த உணவே பாற்கஞ்சி!

 

- ஷெல்லிதாசன்


 

 

 

எஸ். ஏ. மேத்தா

தரம்-05, பி, மட்/ கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம்

மட்டக்களப்பு

எஸ். வசந்த

தரம் 06 பி, கலைமகள் தமிழ் வித்தியாலயம், மத்துகம.

ந. நவபிரேமவாணி,

தரம் - 09, க/ இந்து தேசியக் கல்லூரி, புசல்லாவ

ஷியாப் ரிக்காஸ்

தரம் - 05, கிங்ஸ்ரன் சர்வதேச பாடசாலை, வெள்ளவத்தை

ஹப்ஸா ஐயூப்கான்

தரம் 04 ஏ,

பாத்திமா முஸ்லிம் கல்லூரி,

கொழும்பு - 12

எம். எப். எம். பர்ஸாட்,

தரம் 6 ஏ, மாவ/ தல்கஸ்பிட்டிய மு. ம. வி. அரநாயக்க.

ஏ ஆர். ஸஹ்லா,

தரம் 02 ஏ., ப/ அல்-முர்ஷித் ம. வி., சில்மியாபுர.

சு. மதுரா,

தரம் 04 எஸ், மட்/ கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயம், மட்டக்களப்பு

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.