புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

ஷநவநாகரிக வர்த்தகம்'' என்ற இலக்குடன் ர்ளுடீஊ ஊகுறு 2012

ஷநவநாகரிக வர்த்தகம்'' என்ற இலக்குடன் ர்ளுடீஊ ஊகுறு 2012

இம்மாதம் 24ம் திகதி ஆரம்பம்

இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் ஆடையலங்கார வடிவமைப்புத் துறையினை மற்றுமொரு தளத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இடம்பெறும் HSBC CFW 2012 பெப்ரவரி 24, 25, 26ம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

கடந்த பல வருடங்களாக HSBC கொழும்பு / பேஷன் வார நிகழ்வு வர்த்தக நோக்கினை வலுப்படுத்தும் வகையில் நடைபெறுகின்றது. இதன் மூலம் இலங்கையிலுள்ள இளம் வடிவமைப்பாளர்கள் வர்த்தக ரீதியாக செயற்பட்டு தமது வடிவமைப்புத் திறன்களை மேம்படுத்த முடியும்.

உள்நாட்டு வடிவமைப்பாளர்களின் வர்த்தக நாமத்திற்கும், வடிவமைப்பாளர்களுக்கும் வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் HSBC CFW டிறங்க், கன்டலோப் புட்டீக், ஆக்ஷி, மெலாஷ், கொட்டன் கலக்ஷன் ஆகிய ஐந்து சில்லறை வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள நவநாகரிக பொருட் கொள்வனவாளர்களுக்கான வடிவமைப்பு அல்லது விற்பனை நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை உருவாக்கும் எண்ணத்துடன் கைகோர்த்துள்ளது.

அனைவரின் எதிர்ப்பார்ப்பிற்கேற்ப உள்நாட்டில் பெயர்பெற்ற மற்றும் புதுமுகங்களான 20 தேசிய ஆடை அலங்கார வடிவமைப்பாளர்கள் உன்னதமான முறையில் வடிவமைக்கப்பட்ட தமது மிகச்சிறந்த தொகுப்பினை நிகழ்வு இடம்பெறும் மூன்று நாட்களில் காட்சிப்படுத்துவார்கள்.

மிகுந்த திறமைமிக்க இலங்கை வடிவமைப்பாளர்களான தர்ஷி, கேரீ பிறவுன், யோலந்த, பெளசுல் ஹமீட், சோனாலி பெர்னாண்டோ, ரமோணா, உபேக்கா ஆகியோர் உள்நாட்டு வர்த்தக நாமங்களான ஸ்ட்றிங் ஹொப்பர், அறுகம்பே, மிடில், பிங்கர்.

புதுமுகங்களான லிலான், கிஹான் ஆகியோர் தமது படைப்புகள் மூலம் ஏற்பாட்டார்களை கவர்ந்தமை காரணமாக இம்முறை தமது வடிவமைப்புகளை HSBC CFW நியூயோக் நகரிலிருந்து வருகை தந்திருக்கும் பெரின் பெர்னாண்டோ இணைந்து செயல்படவுள்ளது CFW  முகாமைத்துவத்துடன் இணைந்து இந்த செயற்திட்டத்தில் முனைப்புடன் செயலாற்றும் அவர் CFW இன் உத்தியோகபூர்வ பேச்சாளராக செயற்படவுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.