புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

ஷறன்வன் பாட'' ஊக்குவிப்பு

Asian Paintsஇன்

ஷறன்வன் பாட'' ஊக்குவிப்பு

மூலம் அனேக வெகுமதிகள்

இலங்கையில் ஏசியன் பெயின்ட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மலர்ந்துள்ள புத்தாண்டு மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. கம்பனி தனது வாடிக்கையாளர்களுக்கும், பெயின்ட் பூசுபவர்களுக்கும் தங்க தாணயங்களை பரிசாக அள்ளி வழங்கியுள்ளதோடு “றன்வன் பாட” பிரம்மாண்ட ஊக்குவிப்பின் மூலம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டவருக்கு புத்தகம் புதிய விவா எலைட் கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளது.

தம்புள்ளையைச் சேர்ந்த ஆர்.கே.என். விக்கிரமசிங்க என்பவரே சிக்கனமான இந்தப் புத்தம் புதிய விவா எலைட் காரை வென்றுள்ளார். இந்த ஊக்குவிப்புத் திட்ட போட்டிகளில் பங்கேற்ற 26 வாடிக்கையாளர்களும், 26 பெயிண்ட் பூசுபவர்களுமாக மொத்தம் 52 பேர் தங்க நாணயங்களை வென்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் 8 கிராம் மற்றும் 4 கிராம் எடை கொண்ட தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இலங்கையில் ஏஸியன் பெயின்ட்ஸ் நடத்தியுள்ள இந்த வகையைச் சார்ந்த முதலாவது ஊக்குவிப்புத் திட்டம் இதுவாகும்.

மூன்று மாத கால ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் இரண்டு வாடிக்கையாளர்களும், இரண்டு பெயின்ட் பூசுபவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பண்டிகைக் காலங்களோடு இணைந்ததாக ஒவ்வொரு மாத இறுதியிலும் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 2012 ஜனவரியில் இடம்பெற்ற பிரம்மாண்ட இறுதித் தெரிவில் விவா எலைட் காரை வெற்றி பெற்ற வாடிக்கையாளர் தெரிவு செய்யப்பட்டார்.

கலன் பிந்துனுவெவ, கெகிராவ, உக்குவெல, பூகொடை, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களே அதிகமான அளவு தங்க நாணத்தை வென்றுள்ளமை இந்தப் போட்டியின் சிறப்பம்சமாகும்.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாடிக்கையாளர்கள் நான்கு லீற்றர்கள் கொண்ட ஏஸியன் பெயின்ட்ஸின் றோயேல் லக்ஸரி எமல்ஸனை வாங்கி, அதனோடு வழங்கப்படும் கூப்பனை நிரப்பி அதனோடு சேர்த்து அதன் லேபிளையும் அனுப்ப வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தது.

இந்தக் கூப்பனின் மத்திய பகுதியில் கேட்கப்பட்டிருந்த விவரங்களின் படி வாடிக்கையாளரால் பெயின்ட் பூசுவதற்காக அமர்த்தப்பட்டவரின் பெயர் விவபரங்களும் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் பரிசுகளை வெல்வதற்கான பல வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

22 நாடுகளில் செயற்பாடுகளைக் கொண்டுள்ள இந்தியாவின் மிகவும் கீர்த்திமிக்க பல்தேசிய நிறுவனமான ஏஷியன் பெயின்ட்ஸ் பொறுப்பேற்ற முதலாவது கடல் கடந்த வர்த்தகம் இதுவாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.