புத் 64 இல. 08

கர வருடம் மாசி மாதம் 07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1433 ர.அவ்வல் பிறை 26

SUNDAY FEBRUARY 19,  2012

 

MBSL வங்கியுடன் கைகோர்க்கும்

முக்கிய அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி சேகரிப்பு;
 

MBSL வங்கியுடன் கைகோர்க்கும்
State Bank of India Capital Market Ltd

இலங்கை பொருளாதாரம் துரிதகதியில் வளர்ச்சியடைந்து வரும் விதத்தை கருத்தில் கொண்டு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவியளித்து வலுவூட்டுவதில் முக்கிய பங்காற்றும் நோக்கத்துடன் MBSL நாடெங்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வளமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சிகளுக்கு பொருத்தமான முதலீட்டாளர்களை கவர்வதில் ஈடுபட இருக்கும் State Bank of India Capital Market Ltd MBSL அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

MBSL பணிப்பாளர் பி.ஜி. ரூபசிங்க இந்த முயற்சி பற்றி கருத்துத் தெரிவிக்கையில் 'வேகமாக மாறிவரும் வர்த்தக உலகில் நிலையான நீண்டகால போட்டி மிக்க முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக SBI உடனான எங்கள் முக்கிய செயலுறவை புதுப்பித்துக் கொள்ளும் நோக்கத்துடன் State Bank of India Capital Market Ltd இன் Merchant Banking பிரிவுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பின்தங்கிய பிரதேசங்களை ஒருங்கிணைக்கும் வகையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், முக்கிய வீதிகள், புகையிரத வலையமைப்புக்கள் போன்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களை பூர்த்தி செய்தல், 100 சதவீத மின் விநியோகத்தை மேற்கொள்ளக் கூடியதாக புதிய மின்சார உற்பத்தி திட்டங்களை நிறுவுதல், முன்னேற்றமான முதலீட்டு வாய்ப்புக்களுக்கான தனியார்துறை பங்களிப்பை ஊக்குவித்தல் ஆகியன இந்த முயற்சிகளில் அடங்கும்.

சம அளவில் கவனமும் நெகிழ்ச்சியான தன்மையும் தேவைப்படும் சிக்கலான, உறுதியற்ற, தொடர்ச்சியற்ற, வெளியக சூழலில் சுயாதீன நிறுவனங்களாக தொடர்ந்தும் இருக்கும் அதேவேளை பொதுவான ஒரு குறிக்கோளை அடைவதற்கு இரு பங்களார்களினதும் வளங்களை பயன்படுத்த சர்வதேச தொடர்பை கொண்டுள்ள எம் போன்ற இன்னுமொரு நிறுவனத்துடன் சம்பிரதாயபூர்வமான புரிந்துணர்வை தன்னார்வ கூட்டை கொண்டிருந்தால் அது பரஸ்பரம் அனுகூலமாக இருப்பதுடன் நாட்டில் Merchant Bank நடவடிக்கைகள் உட்பட நிதி சேவைகள் துறையின் வளர்ச்சிக்கு நிச்சயமாக உதவியாக இருக்குமென நம்புகிறோம்.'

தற்போது இலக்கு வைத்துள்ள திட்டங்களில் மன்னாருக்கும் அம்பாந்தோட்டைக்குமிடையிலான நெடுஞ்சாலை (மொனராகல, அம்பாறை, மட்டக்களப்பு ஆகியன ஊடாக), இனம் காணப்பட்ட ரெயில்வே பாதைகளுக்கு மின் விநியோகம், ஹிங்குராங்கொடையில் சர்வதேச விமான நிலைய நிர்மாணம் உட்பட விமான நிலையங்களின் வலையமைப்பை கட்டியெழுப்புதல், மட்டக்களப்பு, களுத்துறை, புத்தளம், காலி ஆகிய இடங்களில் விமான நிலையங்களின் விஸ்தரிப்பு, கண்டி, நுவரெலியா, மன்னார், மொனராகல, தம்புள்ள ஆகிய இடங்களில் புதிய உள்ளூர் விமான நிலையங்களை நிர்மாணித்தல், திருகோணமலை, காலி துறைமுகங்களை விஸ்தரித்தல் என்பன அடங்கும்.

இவற்றுடன், மின்சாரம், எரிசக்தி துறை, பிரயாணம், சுற்றுலாத் துறை, தகவல் தொடர்பாடல், தொழில் நுட்பத் துறை ஆகியன தொடர்பான திட்டங்களிலும் வங்கி ஈடுபட்டுள்ளது.

காப்புறுதித் திட்டங்கள், ஹோட்டல் திட்டங்கள், மின் பிறப்பாக்கி உற்பத்தித் திட்டம், திரவ வாயு கம்பனி ஒன்றுக்கான கடன் பத்திரம் வழங்கல், அம்பாந்தோட்டையில் சூரிய சக்தி திட்டங்களுக்கு நிதியளித்தல், தனியார் மற்றும் அரசாங்க பங்குடைமைகள், தேசிய திட்டங்களுக்கென சில கூட்டு முயற்சிகளின் பங்களிப்புகள் என்பனவற்றையும் குறிப்பிடலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.