கர வருடம் புரட்டாதி மாதம் 08ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷவ்வால் பிறை 26
SUNDAY SEPTEMBER 25, 2011

Print

 
இஸ்லாம் பலாச்சுளையைப் போன்றது

இஸ்லாம் பலாச்சுளையைப் போன்றது

அறிஞர் அண்ணாவின் பார்வையில் இஸ்லாம்

இஸ்லாம் என்பது ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பா கும். இத்துணை சம்பிர தாய சடங்குகள் கொண்டதா? இஸ்லாம் என்று அதனைப் பற்றி புரிந்துகொள்ள அஞ்சுப வர்களால், அதன் உள் புகுந்து உயர் நோக்கறிய முனையாத வர்களால் இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

பலாப்பழத்தின் மேலுள்ள முள் குத்துமே என்று அஞ்சுப வர்களுக்கு அதன் உள்ளே உள்ள சுவையான கனிகளை உண்ணும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?

அதே போன்றே இஸ்லாம், சம்பிரதாயம் என்ற முள் கூட கையிலே குத்தி, குருதியைக் கொண்டு வந்து விடுவதில்லை. தெரிந்துகொள்ளும் ஆவலுடன் உள்புகுந்து அறிந்தால், தோல் நீக்கிய கனி கிடைப்பது போல், நல்ல சுவையுள்ள கனி கிடை க்கும் சுதந்திர மார்க்கம் இஸ்லாமாகும்.

பலாச் சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டை களையும் நீக்கிவிட்டே தின் பார்கள். அதுபோன்றே மதக் கருத்துக்களையும் உணர வேண்டும். சிலர் பலாப்பழத் தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்கா கப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.

அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக் கிறது. மற்றும் சிலர் கொட்டை யுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம்.

ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

எழுச்சி இதயம் என்பது அறிவைத் தேடி அலையும் ஆற்றல் உள்ளதாக அமைதல் வேண்டும்.

நான் இதற்கு முன்னும் சொல்லியிருக்கிறேன். இப்போ தும் சொல்கிறேன். நான் ஒரு கைலி கட்டாத முஸ்லிம்- சிலுவை போடாத கிறிஸ்தவன், திருநீறு அணியாத ஹிந்து.

நல்லவை எங்கு தென்படுகிறதோ அங்கெல்லாம் நான் பழத்தோட்டத்தை நாடி பறவையினங்கள் பறந்தோடு வது போல், ஏற்புடைய என் இதயத்துக்கு இனியவைகளை, வல்லவைகளை அவை இருக் கும் இடம் பற்றிக் கவலைப் படாமல் எடுத்து வந்து விடு வதுண்டு.

அப்படி இஸ்லாத்தில் நான் எடுத்துக் கொண்டவைகளுள் மிக முக்கியமானது பொறுமை. அந்தப் பொறுமையின் உரி மையை நான் மிகப் பெருமை யாக அனுபவித்து வருகின்றேன்.

வாய்மையில், வளர்க்கும் மனத்தூய்மையில் சிறக்கும் பொறுமை ஒன்றில் தான் உலகம் அளப்பரிய சாதனை களைக் காண முடிந்தது.

அந்த சாதனைகள் இஸ்லா மிய வரலாறெங்கும் வளர்ந்து நிற்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

வாளேந்தி, வன்சமர் புரிந்து சாதிக்க முடியாத சாதனைகளைக் கூட நபிகள் பிரானின் இன் சொல்லும், புன் முறுவலும் தனக்கே உரிய தனித்த ஆயுத மான பொறுமையினாலும் வெற்றி கொண்டு இருக்கிற சக்தி அண்ணலின்பால் எனக்கு அளப்பரிய பக்தியை உண்டாக்கி விட்டது.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது. இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை.

ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.

இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒருகோடி பேர் கூட இருக்க வில்லை. அந்த அரசுகளெல் லாம் மறைந்த பிறகே 10 கோடி மக்களாகப் பெருகினார்கள்.

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடை யிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியு றுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று. தொட்டிலிலே படுத் துறங்கும் குழந்தையைத் தட்டி யெழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

இஸ்லாத்திற்கெதிரான புனிதப் போர்!

இஸ்லாத்தைக் குறிவைத்துத் தாக்கும் பணியை உலக அளவில் பிரபல் யமான பத்திரிகைகள் சிலவும் செய்துகொண்டிருக்கின்றன.

உலகில் மிகவும் அதிகமாகப் படிக்கப்படும் ஒரு பத்திரிகை ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader’s Digest) என்ற ஆங்கிலப் பத்திரிகை!

இதனுடைய மொத்த வாசகர்கள் இரண்டு கோடியே முப்பது லட்சம்!

இந்தப் பத்திரிகை இஸ்லாத்தின் மேல் தொடுத்திடும் போரைப் பற்றி ஹாலித் பேக் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் அவர்கள் இம்பாக்ட் இண்டர் நேஷனல் (Impact International) என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுகின்றார்.

இந்தக் கட்டுரைக்கு இவர் தந்த தலைப்பு: ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை இஸ்லாத்திற் கெதிராகத் தொடுக்கும் புனிதப் போர்!’ (Reader’s Digest’s Holy War Against Islam) இந்தக் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு இவர் குறிப்பிடுகிறார்.

‘சாதாரண சூழ்நிலைகளில், நல்ல ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி, நியாயம், சகிப்புத் தன்மை ஆகியவற் றைக் கற்பிக்கும் ஒரு பத்திரி கையே இது (அதாவது ரீடர்ஸ் டைஜஸ்ட்)

உலகில் பல்வேறு பாகங்க ளிலும் உள்ள இன்னும் லட்சக்கணக்கான வாசகர்களு க்கு, அருமையான ஆங்கில போதினி இந்தப் பத்திரிகை.

இந்தப் பத்திரிகைக்கு இல்லாத சிறப்பம் சங்களே இல்லை. வியாபார அடிப்படை யில் கூட அலாதியான இலாபத்தைச் சம்பாதிக்கும் ஒரு பத்திரிகை.

ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் இந்தப் பத்திரிகை செய்யாது. அது, அரசியல் பிரசாரத்தை மேற்கொள்ளாது என்பதே. ஆனால் இஸ்லா த்தை எதிர்ப்பது என்பதைப் பொறுத்தவரை இந்தப் பத்திரிகையும் எல்லா வரையறை களையும் மீறிச் செயல்படுகின்றது. இதனால் முஸ்லிம்களிடம் தனக்கேற் படும் அவப் பெயரைப் பற்றிக் கூட இந்தப் பத்திரிகை கவலைப்படுவதில்லை.

இஸ்லாத்தைக் குத்திக்காட்டி, அதை மக்கள் மத்தியில் குறைத்துக் காட்டிட இந்தப் பத்திரிகை, பொய்யைச் சொல்லிடவும் தயங்கிடவில்லை.

இந்தப் பத்திரிகையில் இந்த நூற்றா ண்டின் மிகப் பெரிய சிந்தனையாளராக விளங்கிய அபுல் அஃலா மெளதூதி (ரஹ்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்ட தாக ஒரு பொய்.

‘இஸ்லாமிய அரசு ஃபாசிச அரசுகளைப் போன்றதொரு தோற்றத்தைப் பெற்றிருக் கும்’. மெளலானா அபுல் அஃலா மெளதூதி (ரஹ்) அவர்கள் எங்கேயும் சொல்லாத ஒன்றை சொன்னதாய்ப் பரப்பிவிட்டு, இன்னொரு பொய்.

‘இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சார்ந்த ஹஸன் அல் துராபி அவர்கள், தன் னுடைய பழைமை வாதத்தைப் பயன்படுத்தி, சூடானை வறுமையில் பிடித்துத் தள்ளி விட்டார். இத்தோடு இன்னொரு பொய். அது- ‘அல்ஜீரியாவில், இளம் பெண்கள் தங்கள் உடல்களை முழுமையாக மறைத்திட வில்லை என்பதனால் கொலை செய்யப்பட்டார்கள்.

அடுத்து ஒரு அபாண்டம்: ‘கல்வி அறிவு இஸ்லாம் கடமையாக்கியுள்ள ஜிஹாதை நிறைவேற்றிட தடையாக இருப்பதால் கல்வியே வேண்டாம் என்று சட்டம் போட்டார்கள் இதே அல்ஜீரியாவில்’.

இப்படியெல்லாம் பொய்யை அள்ளித் தெளித்து இஸ்லாத் தின் மேல் ஒரு போரையே தொடுத்து வருகின்றது.

ரீடர்ஸ் டைஜஸ்ட்.


அரபுத் தமிழ்

தமிழ் முஸ்லிம்கள் தமிழை அரபியில் எழுதும் வழக்கம் இன்றும் ஆங்காங்கே இருக்கின்றது. அதனை அரபுத் தமிழ் எனக் கூறப்படும் வார்த்தைகள் அரபி யாகவும் உச்சரிப்பு தமிழாகவும் அமைந்த அற்புதத் தமிழின் தோற்றுதுறை காயல் மாநகர் என்றால் ஆச் சரியமாக உள்ளது அல்லவா? ஆனால் அதுதான் உண்மை. காயலில் உதயமான அரபுத் தமிழ்-தமிழ் இஸ்லாமிய வரலாற்றில் ஒரு புது பிரபந்தத்தையே தோற்றுவித்தது என்றால் அது மிகையில்லை. அரபுத் தமிழில் கடிதப் போக்குவரத்தும் இந்தக் காலத்தில் நடைபெற்றிருக்கிறது.

தரீக்கத்துல் ஹக்கியத்துல் காதிரியாவின் ஸ்தாபகர் எங்கள் ஷைகு நாயகம் அவர்களின் தந்தை நாயகம் குத்புல் ஃபழித் ஜமாலிய்யா ஸய்யித் யாஸின் மெளலானா ரஹிமஹுல்லாஹ் அவர்கள், அரபுத் தமிழில் ஓர் அற்புதமான காமூஸ்-அரபு-அரபுத் தமிழ் அகராதி ஒன்றை வெளியிட்டார்கள்.

அதனை எமது ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸ¤ல் வுஜுது ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுள் ஹாஷிமிய் அவர்கள் நவீன சொற்களையும் இணைத்து அற்புதமாகத் தமிழாக்கம் செய்துள்ளார்கள். இலங்கை வெலிகமையில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழாவில் அதன் முதல் பிரதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழக்கத் தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம். ஏ. அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

காயல் நகரில் பூத்த ஆன்மிகச் சுடர் அல்லாமா மாப் பிள்ளை லெப்பை ஆலிம் எனப்படும் சைய்யது முஹம்மது அலிமுற்றப்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அரபு மொழி யிலும் கரைகாணா கடல் போன்றவர்கள். அதுபோல் அரபுத் தமிழிலும் எண்ணற்ற காவியங்களை உருவாக்கியவர்கள். அவர்கள் சுமார் 40 நூல்களை உருவாக்கியவர்கள். இஸ்லா மிய ஷரீஅத் மற்றும் மஃரிஃபத் சம்பந்தப்பட்ட காவியங் கள், காலத்தால் நிலைத்து நிற்பவை. அன்னார் அவர்களின் ஆக்கங்களில் ஒன்றான பத்ரு மவ்லீது அரபுப் பாக்களை எமது ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ஷம்ஸ¤ல் வஜுது ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸ னிய்யுல் ஹாஷிமிய் அவர்கள், அழகுத் தமிழில் அற்புதமா கத் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.

அதனை அந்தியும் சந்தியும் முரீதுகளும், ஆலீம் பெருந் தகையினரும் பொது மக்களும் ஓதி அளவிலாப் பேரின்பம் பேருவகையும் தடையில்லாப் பேருதவியும் பெற்று பெரு வாழ்வு வாழ்கின்றனர் என்பதனை இங்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றேன்.

கிப்லா ஹள்ரத் மெளலவி

என். அப்துஸ்ஸலாம் ஆலிம்...-

காயல்பட்டணம்

ஹஜ் யாத்திரை அறிவுறுத்தல்

இம்முறை ஹஜ்ஜுக் குச் செல்லும் யாத்திரிகர் களிடம் இருந்து 3,40,000 ரூபாவுக்கு மேல் கட்டணம் அறவிடக் கூடாதென அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.

இம்முறை 3800 ஹஜ் விஸாக்கள் கிடைத்துள் ளன. முதல் தடவை யாகச் செல்வோருக்கே முன் னுரிமை அளிக்கப்படும்.

கூடுதலான கட்டணம் அறவிடும் ஹஜ் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்துள்ளார்.

3800 கோட்டாக்கள் 110 ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளன. இக்கோட்டாவை எவரும் விற்பனை செய்யவும் முடியாது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]