கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
எண்ணெயும் திரியும் போன்றவன் எழுத்தாளன்

எண்ணெயும் திரியும் போன்றவன் எழுத்தாளன்

ஹிந்தி மொழியில் புகழ்பெற்ற எழுத்தாளர் பிரேம்சந்த். அவருக்கு உடல் நலம் சரியில்லாத சமயத்தில் கூட அவர் தனது எழுத்துப்பணியை விடாமல் செய்து கொண்டு இருந்தார்.

இது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை. “உங்களுக்குத்தான் உடல் நலம் சரியில்லையே. ஏன் இந்த நிலையில் கூட எழுதிக் கொண்டே இருக்கிaர்கள்? உடல் நலத்தைக் கவனிக்கக் கூடாதா? சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்?” என்று கோபமாகக் கத்தினார் அவர் மனைவி.

இதைக் கேட்ட பிரேம்சந்த் “ஒரு விளக்கை ஏற்றிவைத்தால் அதனுடைய கடமை அந்த இடத்திற்கு வெளிச்சம் தருவதுதான்.

அந்த வெளிச்சம் பிறருக்கு நன்மையைத் தருகின்றதா, தீமையைத் தருகின்றதா? என்பதைப் பற்றி அந்த விளக்கிற்குச் சிறிதும் கவலை இல்லை.

எண்ணெய்யும் திரியும் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அது ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கும். எண்ணெய் தீர்ந்தவுடன் அந்த விளக்கு தானாகவே அணைந்துவிடும். அது போலத்தான் என் வாழ்வும்” என்றார்.

முஹம்மது ஹஸனி

கல்முனை - 07


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]