கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
குரலின் இரகசியம்!

குரலின் இரகசியம்!

மனிதனுடைய குரல்வளை என்பது ஒரு பெட்டி போன்ற அமைப்பு, குருத்தெலும்புகளால் ஆன இதன் உட்புறம் சவ்வுப்படலம் உள்ளது.

இருபுறமும் ஓரிடத்தில் இது தடிப்படைந்து பெட்டிக்குள் நீட்டிக்கொண்டு இருக்கும் இவற்றிற்கு குரல் நாண்கள் என்று பெயர். ஒவ்வொரு நாணும் பல தலைகளால் அசைக்கப்படுகின்றன.

சுவாசப் பையிலிருந்து காற்று வாய்க்குச் செல்லும் போது குரல் நாண்கள் அதிர்ச்சியடையச் செய்து ஒலியை எழுப்புகின்றன. இந்த ஒலி அந்த நாண்கள் இருக்கும் நிலைமையைப் பொறுத்து, சுமார் 14 வயதில் குரல் நாண்களும் குரல்வளையும் சற்றுத் தடித்துப் போவதாலேயே குரல் மாறுகிறது.

இதையே மகரக்கட்டு என்கிறோம். வயிறு, மார்பு உதரவிதானம், நாக்கு, வாயண்ணம், உதடு, பற்கள் ஆகிய எல்லாமே குரல் ஒலியை முறைப்படுத்த உதவுகின்றன. பேசவும் பாடவும் இவை எல்லாமே ஒரே நேரத்தில் செயல்பட வேண்டும். சிறுவயதிலிருந்தே பழக்கம் காரணமாக அது வந்துவிடுகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]