கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
கடல்சிங்கம்

நீரில் மூழ்கி தத்தளிப்பவரை காப்பாற்றும் வல்லமை மிக

கடல்சிங்கம்

நீரில் மூழ்கி தத்தளிப்பவரை தந்திரமாக மீட்டு உயிராபத்து ஏற்படாத வகையில் கடற்கரைக்கு தள்ளிக்கொண்டு வந்துவிடும் வல்லமை படைத்தது கடல் சிங்கம். இதே குணத்தை டொல்பின் மீன்களிடமும் காணலாமாம்.

பாலூட்டி வகையை சேர்ந்ததும் மிகவும் புத்திசாலியான உயிரினமாகவும் இருந்து வரும் உயிரினமே கடல் சிங்கம். உலக அளவில் 7 வகை கடல் சிங்கங்கள் இருக்கின்றன. இவற்றின் பெண் இனத்தைவிட ஆண் இனம் பெரியதாக இருக்கும்.

மீசை, பற்களின் அமைப்பு போன்றவை ஓரளவுக்கு சிங்கத்தின் முகத்தைப்போலவே இருப்பதால் இதனை கடல் சிங்கம் என்கிறார்கள். இதன்கால்கள் வேகமாக நீதவும் நடக்கவும் பயன்படுகின்றன.

வலிமையான துடுப்பு போன்று கால்களை நீந்தப் பயன்படுத்தினாலும் மிகவும் லேசானதாகவே இருக்கிறது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒரு வகை கடல் சிங்கம் தரையில் நன்கு வாழ்வதற்கு ஏற்றவாறு உடலமைப்பைப் பெற்றிருக்கிறது. இவை மாதக் கணக்கில் கூட கடற்கரையிலேயே இருக்கும் கடல் வாழ் உயிரினமாகும்.

கடலிலும் நிலப்பரப்பிலும் கூட்டமாகவும் குடும்பமாகவும் வாழும். இவற்றுக்கென்றே தனியாக மொழி உள்ளது. அந்த மொழியின் மூலம் அவை தனித்தனியாகவும் பேசிக்கொள்கின்றனவாம். டொல்பின்களைப் போல புத்திசாலிகளான இவை பந்துகளைத் தூக்கிப்போட்டு விளையாடுவதிலும் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுக்களைப் போல உடலை வளைத்து துள்ளிக் குதித்து விளையாடுவதிலும் ஈடுபடுகின்றன.

காவல்துறையில் நாய்கள் பணியாற்றுவதைப் போல அமெரிக்க கடற்படையில் இவை பணியாற்றுகின்றன.

சுறாவும், திமிங்கிலமும் இவற்றைக்கொல்லும் எதிரிகளாக இருக்கின்றன. உலகெங்கிலும் உள்ள கடல் காட்சியகங்களில் கடல் சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

ழங்காலத்தில் கடல் சிங்கத்தைக் கடவுளாகவும் வழிபட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இவற்றின் மொழி, இருப்பிடம், வித்தைகளைக் கற்றுக்கொள்ளும் விதங்கள் ஆகியன குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]