கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
அரியவகை உயிரினம் யானைக்கை சங்கு

அரியவகை உயிரினம் யானைக்கை சங்கு

கடலில் வசிக்கும் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்த உயிரினம் யானைக் கை சங்கு. பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த அரிய வகை உயிரினம் வேகமாக அழிந்து வருகிறது.

‘யானைக்கை சங்கு கணவாய் மீன் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். தோற்றத்தில் யானையின் தும்பிக்கையை போன்றே இருப்பதால் இதனை யானைக் கை சங்கு என்று அழைக்கிறார்கள்.

சுமார் 500 மில்லியன் வருடங்களுக்கும் மேலாக இதன் வெளிப்புற உருவ அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்து வருவதும் குறிப்பிடத் தக்கது.

இவற்றின் அழகிய வெளி ஓடானது இந்த உயிரினத்தைப் பாதுகாக்கிறது. ஓட்டின் உள்ளே இருக்கும் அகன்ற பகுதியில் வாயுவை நிரப்பிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த வசதியால் தரையில் இருந்து குறைந்த தூரம் மேல்நோக்கி மிதக்கவும் முடிகிறது. இதன் வெளி ஓடு இதனைப் பாதுகாத்தாலும் அதன் அழகே அதற்கு எதிரியாகி மனிதர்களை கவர்ந்திழுக்கிறது.

எனவே இவற்றைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போய் இதன் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

குறைவான முட்டைகளே இடுவதாலும் இதன் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டது. கடலின் அடியில் கிடக்கும் கழிவுகளைத் தின்று உயிர் வாழும் இந்த உயிரினம் கடலின் அடிப்பகுதி சுத்தமாக இருக்கவும் உதவுகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]