கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
கைதியான பொன்சேகா ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்துக் கூறுவது எப்படி?

கைதியான பொன்சேகா ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்துக் கூறுவது எப்படி?

சட்டத்திற்கு முரணானது; தண்டனைக்குரிய குற்றம்

பாராளுமன்றத்தில் அஸ்வர் ணிஜி கேள்விக் கணை?

சிறைவாசம் அனுபவிக்கும் கைதியான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துக்கூற எவ்வாறு அனுமதிக்கப்பட்டு வருகிறார்? என வெள்ளியன்று பாராளுமன்றத்தில் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

சிறைச்சாலைகள் சட்டத்தின் 68ஆவது சரத்தின் பிரகாரம் தண்ட னைக் கைதியொருவர் ஊடகங் களுக்குக் கருத்துக்கூற முடியாது. ஆனால் சரத் பொன்சேகா தனியார் வைத்தியசாலைக்கும், நீதிமன்றத்திற்கும் வரும்போதும், திரும்பிச் செல்லும் போதும் ஊடகங்களுக்கு சுதந்திரமாகக் கருத்துத் தெரிவித்து வருகிறார். அத்துடன் கையை உயர்த்திக் காட்டிக் காட்டி அவர் தொலைக்காட்சி களுக்கு கருத்துக் கூறிவருவது தண்டனைக் குரிய குற்றமாகும்.

சரத் பொன்சேகா இவ்வாறு நடந்து கொள்ள அனுமதி வழங்கியது யார்? என்றும் அஸ்வர் எம்.பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். நீதியமைச்சும் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஸ்வர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறைச்சாலையிலுள்ள தண்டனைபெற்ற சிறைக்கைதியான சரத் பொன்சேகா இவ்வளவு சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கக் கூடாது. அதற்கு சிறைச்சாலை நிர்வாகம் அனுமதிப்பது தவறு. அதனை நிர்வாகம் தடுக்க வேண்டும். அதனையும் மீறி சரத் பொன்சேகா கருத்துக் கூறினால் பொன்சேகாவிற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்து வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அஸ்வர் எம்.பி சபையில் தெரிவித்தார்.

அவரின் உரையினைச் செவிமடுத்த சபையிலிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அஸ்வர் எம்.பி.யின் கருத்திற்குத் தமது ஆதரவினைத் தெரிவித்தனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]