கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
முல்லைத்தீவில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் PC house

முல்லைத்தீவில் தகவல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் PC house

PC house பி.எல்.சி. நிறுவனம் பங்கு வழங்கலின் போது வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், நாடு முழுவதும் தனது கிளையை பரப்பும் வகையில் வடக்கிழக்கு பகுதியில் முல் லைத்தீவு மாவட்டத்தில் தனது புதிய கிளையை திறந்துவைத்துள்ளது.

இது முல்லைத்தீவில் முதன்முதலில் திறந்துவைக்கப்பட்ட ICT எனப்படும் “தகவல் தொடர்பாடல் தொழிலநுட்ப” வசதியைக் கொண்ட ஒரேயொரு கிளை யாகும்.

இதன் ஊடாக நீண்ட காலமாக தொழில்நுட்ப ரீதியில் பின்தங்கிய நிலையிலிருந்த அப்பகுதி மக்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அவர்களு க்கு அருகிலே கொண்டு செல்ல முடிந் துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த புதிய விற்பனை நிலையத்தின் ஊடாக உலக தரம் வாய்ந்த வர்த்தக நாமங்களைக் கொண்ட பல்வேறு பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை கட்டுப்படி யான விலைகளில் வழங் கத் தீர்மானிக்கப்படுகின்றது.

PC house ஆனது இந்த புதிய கிளையுடன் அண்மை யில் மட்டக்களப்பு, கேகாலை மற்றும் மாத்தளையில் திறந்துவைக்கப்பட்ட கிளைகளுடன் சேர்த்து, மொத்தமாக 37 கிளைகளை தற்போது நாடு முழுவதும் கொண்டுள்ளது.

பிராந்திய மற்றும் சிறிய வியாபார நடவடிக்கைகளுக் கான தலைமை அதி காரி துவெய்ல் முசா தீன் கூறுகையில், இந்த விற்பனை நிலையத்தின் ஊடாக கட்டுப்படியான விலைகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிராண்டட் ஹாட்வெயார் மற்றும் செப்ட் வெயார்களை வழங்கவுள்ள துடன், இப் பகுதியிலுள்ள வியாபார நிறுவனங்க ளின் வினைத்திறனை அதிகரிப்ப தற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

PC house நிறுவனத்தின் தலைவர் எஸ்.எச்.எம். ரிஷான் மேலும் கூறும்போது,

30 வருட கால போர்ச் சூழல் காரணமாக தொழில்நுட்பம், கல்வி, வேலை வாய்ப்புகள், வசதி வாய்ப்புகள் போன்றவற்றில் பின் தங்கிய நிலையிலிருக்கும் இப்பகுதியை முன்னேற்றுவதில், ஒரு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் என்ற வகையில் இத் தகைய இலவச சேவைகளை வழங்கு வது எமது கடமையாகும்.

காலி, அம்பாந்தோட்டை மற்றும் மாத் தறை போன்ற பகுதிகளிலுள்ள எமது கிளை நிறுவனங்கள் மேற்கொள்வது போன்று இக்கிளையின் ஊடாக எதிர்காலத்தில் மாணவர்களுக்கும் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் கம்பியூட்டர் தொழில்நுட்பம் சம்பந்தமான அடிப் படை பயிற்சிகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]