கர வருடம் ஆடி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 21
SUNDAY JULY 24, 2011

Print

 
இலங்கையில் ஈஸி கம்பனி குழும த்தின் கொடியின் கீழியங்கும் ஈஸிஸ் டெக்னோலஜிஸ் கம்பனி லிமிடெட் கணனிகளின் பாதுகாப்புத் தொடர்பில் உலகில் முன்னணி வகிக்கும் நிறுவன மான டிரென்ட் மைக்ரோவுடனான அதன் பங்குடமை குறித்தும் கொழு ம்பில் அண்மையில் இடம்பெற்ற அறி முக விழாவில்

கணனியின் வேகத்தைப் பாதிக்காத பாதுகாப்பு மென்பொருள்; க்ளௌட் சிக்கிய+ரிட்டி அறிமுகம்

இலங்கையில் ஈஸி கம்பனி குழும த்தின் கொடியின் கீழியங்கும் ஈஸிஸ் டெக்னோலஜிஸ் கம்பனி லிமிடெட் கணனிகளின் பாதுகாப்புத் தொடர்பில் உலகில் முன்னணி வகிக்கும் நிறுவன மான டிரென்ட் மைக்ரோவுடனான அதன் பங்குடமை குறித்தும் கொழு ம்பில் அண்மையில் இடம்பெற்ற அறி முக விழாவில் அறிவித்தது. ‘பாரம்பரிய ரீதியான பாதுகாப்பு முறைகள் கணனி க்குள் வரும் எல்லாவற்றையும் ஸ்கேன் செய்யும், ஆனால் க்ளெளட் சிக்கியு ரிட்டி, கணனிக்குள் வரும் தகவல்கள் அனைத்தையும் இடைமறித்து, ‘க்ளெளட்’ முறை மூலமாக வெளியே அவற்றை ஸ்கேன் செய்து அவற்றை அனும திக்கவோ நிராகரிக்கவோ செய்கிறது. இது கணனியின் சக்தி விரயத்தைக் குறைப்பதோடு, கணனி பாதுகாக்கப் படும் நேரத்தையும் அதிகரிக்கின்றது’ என்று தெரிவித்தார் டிரென்ட் மைக் ரோவின் இந்தியா மற்றும் சார்க் நாடுக ளுக்கான தலைவர், திரு. அமித் நாத்.

கணனி உதிரிப்பாகங்களை நாடெங் கும் விற்பனை செய்வதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஈkஸ், நாடெங் கும் சுமார் 500 விநியோகத்தர்களைக் கொண்டுள்ளது. உலகின் முன்னணி வகிக்கும் தொழில்நுட்ப ரீதியான வர் த்தக நாமங்களுடன் கூட்டிணைவைக் கொண்டுள்ளதன் மூலம் இலங்கையில் நவீன, மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கிடைக்கச் செய்கிறது.

க்ளெளட் சிக்கியுரிட்டியில் உலகில் முன்னணி வகிக்கும், டிரென்ட் மைக்ரோ இன்கோபரேடட், அதன் வர்த்தக நிறு வனங்கள் மற்றும் பாவனையாளர்களு க்கான இணையப் பாதுகாப்பு மற்றும் ஆபத்து முகாமைத்துவ தீர்வுகள் மூலம், டிஜிட்டல் தகவல்கள் பாதுகாப்பான முறையில் பரிமாற்றப்பட வழிசமைத்துள் ளது.

சேவர்களின் பாதுகாப்பில் முன்னோடி களும், 20 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர்களும் என்ற வகையில், எங்கள் வாடிக்கையாளர்க ளுக்கு சேவர்களையும் க்ளெளட் அடிப்படையிலான பாதுகாப்பு முறை களையும் அவர்களது தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய வகையில், வழங் குகின்றோம். இது மிக விரைவாகச் செயற்பட்டு கணனிகளை ஆபத்துக்க ளிலிருந்து தடுக்கின்றது. க்ளெளட்டின் இந்தப் பாதுகாப்பு நடைமுறைகள், டிரென்ட் மைக்ரோ ஸ்மார்ட் புரொ டெக்ஷன் நெட்வேர்க்கினால் பலப்படு த்தப்பட்டுள்ளது. இதன் உற்பத்திகளும் சேவைகளும் ஆபத்துக்கள் எங்கிருந்து உற்பத்தியாகின்றனவோ அங்கேயே, இணையத்திலேயே அவற்றை அழித்து விடுகின்றன. உலகெங்குமுள்ள ஆபத் தினை இனங்காணும் விற்பன்னர்களின் உதவியும் கிடைக்கும்.’ என்றார் நாத்.

இலங்கையில் கிடைக்கும் டிரென்ட் மைக்ரோவின் உற்பத்திகளில் டிரென்ட் மைக்ரோ டைட்டானியம் 2011 உம் அடங்கும். இது டிரென்ட் மைக்ரோவின் மிக நவீனமான பாதுகாப்பு மென் பொருளாகும். டிரென்ட் மைக்ரோ டைட்டானியம் 2011, பயன்படுத்துவதற்கு இலகுவானதோடு சிறந்த செயற்பாட்டு திறனோடு, பாவனையாளர்களின் கணனியிலுள்ள தகவல்களைப் பாது காக்கின்றது.

எந்தவொரு வகையான வைரஸ் தாக்குதலும், ஸ்பை வெயார் என்பனவும் கணனியை அணுகுவதற்கு முன்ன ரேயே அழித்துவிடுகின்றன. டிரென்ட் மைக்ரோ ஸ்மார்ட்டின் பாதுகாப்பு வலைப்பின்னலால் பலப்படுத்தப்பட்டு ள்ள டைட்டானியம், ஆபத்தான தகவல் களைச் சேகரித்து அவை கணனியை அண்மிப்பதற்கு முன்னரேயே அழித்து விடுகின்றன. இச்செயற்பாடுகளெல்லாம் க்ளெளட் முறையிலேயே மேற்கொள்ள ப்படுவதனால் மிகக் குறைந்தளவிலான மெமரி மற்றும் டிஸ்க் ஸ்பேஸ் என் பனவே தேவைப்படுகின்றன. கணனி யின் வேகத்தையும் இது பாதிப்படையச் செய்யாது’ என்றார் நாத்.

வர்த்தக நிறுவனங்களின் கணனிகளை ஆபத்து அணுகு முன்னர் அது தடுத்து நிறுத்தப்படுகின்றது. டிரென்ட் மைக்ரோ ஸ்மார்ட் பாதுகாப்பு வலையமைப்பின் மூலமே இது மேற்கொள்ளப்படுகின்றது. இம்முறை மூலம் 3.2 டெராபைட் தகவல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வடிகட்டப்படுகின்றது. நாளொன்றுக்கு 5 பில்லியன் அச்சுறுத்தல்கள் இதன் மூலம் தடுக்கப்படுகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]