ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 
விசாரணைகள் பூர்த்தி ; எந்நேரமும் கைதாகலாம்

சட்டவிரோத ஊர்வலங்கள்

விசாரணைகள் பூர்த்தி ; எந்நேரமும் கைதாகலாம்
 

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட தினத்தன்று சட்டவிரோதமான முறையில் ஊர்வலங்கள் நடத்தியவர் களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப் பட்டுள்ளதாகவும் அவரது பரிந்துரை கிடைத்தபின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேக்கரா தெரிவித்தார்.

மத விவகாரங்கள் தொடர்பான விழாக்கள் ஊர்வலங்களைத்தவிர வேறு எந்தவிதமான ஊர்வலங்கள் நடத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டி ருந்தாலும், வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட தினம் சட்ட விரோதமான முறையில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டி ருப்பதாக முறைப்பாடுகள் கிடைத் துள்ளன.

இவை தொடர்பாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் என். கே. இளங் ககோன் பிராந்தியத்திலுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உத்தர விட்டிருந்தார். இதன்படி கண்டி பிரதேசத்தில் மூன்று சம்பவங்களும், கம்பஹா பிரதேசத்தில் ஒரு சம்பவமும், அவிஸ்ஸாவ ளையில் ஒரு சம்பவமும் பதிவாகி யுள்ளது.

இச்சம்பவங்கள் தொடர்பாக விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் விசார ணைகள் முடிவுற்றுள்ளன. தொடர்புடைய மூன்று வேட்பாளர்களிடமும் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளன.

எனவே ஊர்வலங்களை ஏற்பாடு செய்த முன்னின்று நடத்திய, கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக சட்ட மா அதிபரின் பரிந்துரைகள் பெறும் நோக்கில் விசாரணை அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி