ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை
THURSDAY, JULY 23 ,2015

Print

 
மைலோ கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி 25ஆம் திகதி மாத்தளையில்

மைலோ கிண்ண வலைப்பந்தாட்ட போட்டி 25ஆம் திகதி மாத்தளையில்

இலங்கை பாடசாலைகள் வலைப் பந்தாட்ட சங்கம் மைலோ நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் 23 வது மைலோ கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 25ம் திகதி முதல் 27ம் திகதி வரை மாத்தளை பேர்னாட் அலுவிகார மைதானத்தில் இடம்பெறும்.

பாடசாலை மட்டத்தில் வலைப்பந்தாட்ட போட்டியை வலுப்பெறச் செய்வதற்கும் வெளி மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கு பற்றுவதற்குமாக இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இப்போட்டிகள் 4 வயது பிரிவில் இடம்பெறும் 13, 14, 16 மற்றும் 18 வயதுப் பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்படும்.

இதில் ஏ.பி. என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 14 நிலையங்களில் இடம்பெறும்.

இம்முறை இடம் பெறும் போட்டியில் 120 பாடசாலைகளில் இருந்து 4000 வீராங் கணைகள் பங்கேற் கின்றனர். இதில் பி பிரிவில் 1000 வீரர்கள் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த முறை இடம்பெற்ற போட்டியில் ஏ பிரிவில் 14 வயது, 16 வயது கீழ்ப்பிரிவில் சம்பிய னாக குருநாகல் கன் னியர் மட பாடசாலை அணியும் 18 வயது பிரிவில் களுத்துறை மகளிர் பாடசாலை அணியும் சம்பயினாக தெரிவு செய்யப் பட்டது.

இதேவேளை இப்போட்டியில் உத்தியோகபூர்வ இணையத் தளமும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் உப தலைவர் றோமர் கன்னங்கர, இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவி செமினி அல்விஸினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் இம்முறை இடம்பெறும் மக்கள் விரும்பும் சிறந்த வீராங்கணைக்கான தேர்வும் இடம் பெறவுள்ளது. அதற்கான வாக்களிப்பும் இணையத் தளத்தில் வாக்களிக்க முடி யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]