ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை
THURSDAY, JULY 23 ,2015

Print

 
பிரதமருடன் வைகோ சந்திப்பு: நிலச் சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சு

பிரதமருடன் வைகோ சந்திப்பு: நிலச் சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்;று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். நிலச் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசித்துள்ளார்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினேன். விவசாயிகளுக்கு எதிரான நிலச் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தேன்.

ஆந்திராவில் செம்மரம் வெட்டியது தொடர்பாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதேபோல், நதிநீர் இணைப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கோரினேன். இதுதவிர பல்வேறு வி'யங்கள் குறித்தும் ஆலோசித்தோம். எனது கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்" என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]