ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172
 

லலித் மோடி விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

லலித் மோடி விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் லலித் மோடி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அம ளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டு உள் ளது.

பரபரப்பான அரசியல் சு+ழ்நிலையில், மழைக் கால கூட்டத்தொடருக்காக பாராளுமன்றம் நேற்று கூடியது. மாநிலங்களவை யில் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவிய விவகாரத்தை ஆவேசத்துடன் காங்கிரஸ் எழுப்பியது.

லலித் மோடி விவகாரத்தில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவ காரம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என்றும் விவாதத்தில் சுஷ்மா பங்கேற் பார் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் நேற்;று பாராளுமன்றம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி கொண் டுவர முயன்ற ஒத்திவைப்பு தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. சுஷ்மா விவகாரம் தவிர்த்து காங்கிரஸ் கட்சி ஆட்சிசெய்து வரும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல் கள் தொடர்பாகவும் விவாதம் நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரி அருண் nஜட்லி கூறினார். மக்களவையில் எதிர்க்கட்சிகள் லலித் மோடிக்கு, சுஷ்மா சுவ ராஜ் உதவிசெய்த விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டன. கடும் அமளியை அடுத்து அவையை நண்பகல் 12:00 மணிவரையில் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமளிக்கு இடையே தொடங்கி நடை பெற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி