ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 06
மன்மத வருடம் ஆடி மாதம் 07ம் நாள் வியாழக்கிழமை

THURSDAY, JULY 23 ,2015
வரு. 83 இல.172

மிரிஹானை வெள்ளைவான் இராணுவத்துக்கு சொந்தமானது

ஆயுதம் இராணுவ மேஜர் nஜனரலுடையது

இரண்டு தினங்களுக்கு முன்னர் மிரிஹானை பிரதேசத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வெள்ளைவான் இராணுவத்துக்குச் சொந்தமானது என்றும், இராணுவ வீரர் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமானது என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த துப்பாக்கி பிரசன்ன சில்வாவால் கடந்த 15 வருடங்களாகப் பாவிக்கப்பட்டதொன்று என்றும், அவருக்கு இராணுவத்திலிருந்து பெற்றுக் கொடுக்கப்பட்ட தனிப்பட்ட கைத்துப்பாக்கி என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

விவரம்

தபால் மூலம் வாக்களிக்க 56,823 பேர் தகுதி

[2015-07-23 14:30]

இவ்வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 56 ஆயிரத்து 823 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

விவரம்


இரு இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் பலி

[2015-07-23 13:20]

இலங்கையைச் சேர்ந்த இருவர் இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளனர்.

விவரம்


கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் இருவர் கைது

[2015-07-23 12:40]

சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் வைத்திருந்த இருவரை கல்கிஸ்ஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விவரம்


கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு நாளை முதல் பணம் மீள்செலுத்தப்படும்

[2015-07-23 11:00]

கோல்டன் கீ கடனட்டை கம்பனியில் வைப்பிலிட்ட வாடிக்கையாளர்களின் பணம் நாளை முதல் மீளளிப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

விவரம்


சுமார் 200,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில்

[2015-07-23 10:30]

சுமார் 2 இலட்சம் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அத்துடன் இதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக செயலகம் அறிவித்துள்ளது.

விவரம்


கொஸ்கம பஸ் விபத்தில் 65 பேர் படுகாயம்

கொழும்பு- அவிசாவளை பிரதான வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 65 பேர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

விவரம்


ரிஜிபி நிதி, ஹெட்ஜிங் மோசடி, கிaஸ் கொடுக்கல் வாங்கல்:

மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்

மிகவும் சூட்சுமமான முறையில் மோசடிகள

கிரேக்க நாட்டுடனான கொடுக்கல் வாங்கல், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஹெட்ஜிங் மோசடிக்கு காரணமானவர்கள் பொது மக்களின் பணத்தை சூறையாடியமைக்காக எதிர்காலத்தில் நிச்சயம் தண்டனைக்கு உட்படுத்தப்படுவரென முன்னாள் பிரதியமைச்சர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.மேற்படி அனைத்து மோசடிகளும் மிகவும் சூட்சுமமான முறையில் . . . . .

விவரம்

 

 

ஜே.வி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு சுகததாஸ உள்ளரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படம்
(படம்: சரத் பீரிஸ்)

ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களை பகிர முடியாது

தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு விழாவில் அநுரகுமார திஸாநாயக்க

ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரங்களைப் பகிரமுடியாது என்பதை ஜே.வி.பி இனிமேலும் ஏற்றுக்கொள்ளாது என்பதை உறுதிப்படுத்துவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் கொள்கைகளை மாற்றி அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான புரட்சியை மேற்கொள்ளவேண்டிய தேவையே தற்பொழுது நாட்டில் உருவாகியிருப் பதாகவும் அவர் கூறினார்.

விவரம்

 

எல்பிட்டியில் நேற்று நடைபெற்ற ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் முக்கியஸ்தர்களுடன் கலந்துரை யாடுவதை படத்தில் காணலாம். (படம்: சமன் ஸ்ரீ வெதகே)


 

 

அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சனத்திரள் மத்தியில் சென்ற போது ஒருவரை தாக்க
முற்படுவதைப் படத்தில் காணலாம்.