ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
யுத்த விமானங்களுடன் சிரியாவின் பிரதான விமானத்தளமும் இஸ்லாமிய தேசம் வசமானது

யுத்த விமானங்களுடன் சிரியாவின் பிரதான விமானத்தளமும் இஸ்லாமிய தேசம் வசமானது

சிரிய அரசின் முக்கிய விமானத்தளமான தபகா தளத்தை இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசு சிரியாவின் ரக்கா மாகாணத் தின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்துள்ளது.

அப்கா விமானத்தள கட்டுப்பாட்டை இழந்ததை சிரிய அரச தொலைக்காட்சி உறுதிசெய்துள்ளது. "தப்கா விமானத்தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க கடுமையாக போராடியபோதும் விமா னத்தளத்தில் இருந்து பின்வாங்கிய படையினர் மீண்டும் ஒன்றுதிரண்டு தாக்குதலை ஆரம்பித்துள் ளனர்" என்று அரச தொலைக்காட்சி குறிப்பிட்டது.

விமானத்தளத்தில் இருந்து அரச படை பின்வாங் கிய பின் அந்த பகுதி மீது வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும் கடந்த ஒரு வாரமாக தப்கா தளத்தை கைப்பற்ற இடம்பெற்று வரும் மோதலில் குறைந் தது 346 இஸ்லாமிய தேசம் போராளிகள் கொல்லப்பட்டிருப்பதா கவும் 170க்கும் அதிக மான அரச படைகள் பலியாகி இருப்பதா கவும் சிரியா தொடர் பில் கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தப்கா விமானத்தளம் கிளர்ச்சியாளர்களிடம் விழ்ந்தபோதும் அதனை சூழவுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் மோதல் கள் நிடித்துவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

சிரியாவில் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்க ளின் பிரதான கோட்டையான ரக்கா நகரில் இருந்து சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் தபகா விமானத்தளத்தில் பல யுத்த விமானங்கள், ஹெலி கொப்டர்கள், டாங்கிகள் மற்றும் பீரங்கிகள் இருப் பதாக நம்பப்படுகிறது.

இந்த விமானத்தளம் வீழ்ந்திருப்பது அரச படைக்கு பாரிய பின்னடைவு என்று அவதானிகள் குறிப்பிட் டுள்ளனர். இதனால் வடக்கு சிரியாவில் அரசின் வான் பலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் உள் நாட்டு யுத்தத்தில் 191,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது. முன்னர் ஐசிஸ் என அழைக்கப்பட்டு பின்னர் ஐ.எஸ். என தமது பெயரை சுருக்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள் அண்மைய மாதங்களில் கிழக்கு சிரியா மற்றும் வடக்கு ஈராக் கின் பெரும்பகுதி நிலத்தை கைப்பற்றி அதனை விரிவுபடுத்தி வருகின்றனர்.

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஈராக் கில் மட்டுப்படுத்தப்பட்ட வான் தாக்குதல்களை நடத் திவரும் அமெரிக்கா சிரியாவில் அவ்வாறான தாக் குதல்களை தவிர்த்துவருகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]