ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
நாவலப்பிட்டி ரயில் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்

நாவலப்பிட்டி ரயில் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்

நாவலப்பிட்டிய நகர அபிவிருத்திக்கு சமாந்தரமாக நாவலப்பிட்டிய ரயில் நிலையத்தையும் நவீனமயப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மலைநாட்டு புகையிரத பாதையில் முக்கிய நிலையங்களில் ஒன்றாக விளங்கும் இதனை அபிவிருத்தி செய்ய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 75 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் புகையிரத மேடைகளைப் புனரமைத்தல், இளைப்பாறும் அறை. சிற்றுண்டிச்சாலை புனரமைப்பு மற்றும் வலது குறைந்தோருக்கான விசேட வசதிகள் என்பனவும் ஏற்படுத்தப்படும். மேலும் புகையிரதம் புறப்படும், வரும் நேரங்களை பொது மக்களுக்கு அறிவிக்கும் இலத்திரனியல் சாதனங்களைப் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]