ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
tuesday, August 26, 2014

Print

 
பிரதமர் நரேந்திர மோடிக்கு உடல் நல பரிசோதனை

பிரதமர் நரேந்திர மோடிக்கு உடல் நல பரிசோதனை

பிரதமர் நரேந்திர மோடிக்கு, 63, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் நேற்று முன்தினம் உடல் நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர், ஜனாதிபதி போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அவ்வப்போது உடல் நல பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரதமருக்கு உடல் நல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உடல் நல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதற்காக நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு எய்ம்ஸ் மருத்து வமனைக்கு வந்த அவர், அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தார். இதனால் மருத்துவ மனை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]