ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 
வீதியில் அலையும் மனநோயாளர்கள் சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்

வீதியில் அலையும் மனநோயாளர்கள் சிகிச்சைக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம்

மனநோயினால் பாதிக்க ப்பட்டோர் உண்மையி லேயே பரிதாபத்துடன் நோக்கப்பட வேண்டியவர்களா வர். அவர்கள் மனநோயாளர் வைத்தியாசாலையில் சேர்க்கப் பட்டு தொடர்ச்சியாக சிகிச்சைய ளிக்கப்பட வேண்டியவர்கள்.

மனநோயாளர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். அவர்களை குடும்பத் தினர் ஒதுக்கக் கூடாது. தகுந்த இடத்தில் சிகிச்சைக்காக அனுமதி க்க வேண்டும்.

குடும்பத்தினால் ஒதுக்கப்பட்ட மனநோயாளர் பலர் வீதிகளில் அலைந்து திரிகின்றனர்.

அவர்கள் அழுக்கான உடை யுடன் சரும வியாதிகளுக்கு உட்பட்டு உண்பதற்கு உணவு மின்றி வீதிவீதியாக கையேந்திப் பிச்சை கேட்டு அன்றாடம் வயிற்றை நிரப்புகின்றனர்.

நகர்ப்பகுதிகளைப் பார்த்தோமா னால் வீதியோரங்களிலும் கடை வாசல்களிலும் மனநோயாளார்கள் படுத்துறங்குவதை நாம் காண லாம். இவர்களெல்லாம் குடும்ப ங்களால் அப்புறப்படுத்தப் பட்ட வர்களாவர். இவர்களைப் பார்க் கின்ற போது மனதில் பரிதா பமே ஏற்படுவதுண்டு. இவர்களை மனநோயாளர் வைத்திய சாலைக்கோ அல்லது காப்பகங்க ளுக்கோ அனுப்பி வைப்பதே உசிதமானதாகும்.

இவ்வாறு மனநோயாளர்கள் வீதிகளில் கவனிப்பாரற்று விடப் படுவதால் வீதியில் நடமாடுகின்ற சாதாரண பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுவதுமுண்டு. மட்ட க்களப்பு, அம்பாறை மாவட் டங்களில் உள்ள நகரங்களில் சமீப காலமாக மனநோயாளர் பலர் நடமாடுவதைக் காண முடி கிறது.

பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற சந்தை, ஆலயம் மற்றும் பாடசாலைகள், பஸ் நிலை யம் போன்ற பகுதிகளில் இவர் களை அதிகம் காண முடிகிறது. இவர்களது நடத்தையினால் மக் கள் அச்சமடைகின்றனர். இவர் கள் கிழிந்த அழுக்கான ஆடை யுடன் திரிவதால் பார்ப்போருக்கு மனச்சங்கடம் ஏற்படுகிறது.

வீதியால் செல்லும் பொது மக்களில் சில விஷமிகள் வேண்டுமென்றே மனநோயாள ரைச் சீண்டுகின்றனர்.

இதன்போது மனநோயாளர்கள் கற்களை எடுத்து வீசியெறியும் போது அப்பாவிப் பொதுமக் களும் பாதிக்கப்படுவதுண்டு. மன நோயாளர்களைச் சீண்டுவோரும் ஒருவிதத்தில் உளநலம் பாதிக்கப் பட்டவர்கள்தான். அனுதாபத்துக் குரியோரைத் துன்புறுத்துவது மன வளர்ச்சியற்ற தன்மையின் வெளிப் பாடாகும்.

மனநோயாளர்களை சிகிச்சைக் குட்படுத்துவதில் உரிய அதிகாரி கள் கவனம் செலுத்த வேண்டு மென்பதே எமது எதிர்பார்ப் பாகும்.

Tel: 011 2429279
[email protected]

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி