ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
குமார் சங்கக்கார முதலிடம்

டெஸ்ட் தரவரிசையில்

குமார் சங்கக்கார முதலிடம்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார முதலிடத்தை பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் பொட்டியில் முதல் இனிங்ஸில் சங்ககார 221 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் மூலம் முன்னர் டெஸ்ட் தரவரிசையில் 899 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் இருந்த தென்னாபிரிக்காவின் வீரர் வில்லியர்ஸை பின்தள்ளி 920 புள்ளிகளுடன் சங்ககார முதலிடத்தை அடைந்துள்ளார். அந்த வகையில் வில்லியர்ஸ் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தரவரிசையில் முறையே மூன்றாம் நான்காம் நிலைகளில் தென்னாபிரிக்க வீரர் அம்லா 878 புள்ளிகளுடனும் அவுஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வார்னர் 871 புள்ளிகளுடனும் உள்ளனர். இவர்கள் தவிர 862 புள்ளிகளுடன் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யு+ஸ் 5ஆவது நிலையை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து ஐந்து நிலைகளில் மேற்கிந்திய வீரர் சந்தர்பால்- அவுஸ்திரேலிய வீரர் கிளார்க்- பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா-உல்-ஹக்- நியு+ஸிலாந்து வீரர் ரெய்லர் மற்றும் பாகிஸ்தான் வீரர் யு+னிஸ்கான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் தரவரிசைப்பட்டியலில் 100 இடங்களுக்குள் உள்ள இலங்கை விரர்களை அவதானிக்கும் போது 14 ஆவது நிலையில் மஹேல ஜயவர்த்தனவும் சில்வா 42 ஆவது இடத்திலும் தினேஷ் சந்திமால் 50ஆவது இடத்திலும் பிரசன்ன ஜயவர்தன 58 மற்றும் கருணாரத்ன 70 ஆவது நிலையிலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]