ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் மாதம் பிறை 15
ஜய வருடம் ஆடி மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை
Tuesday, August 12, 2014

Print

 
எபோலா: நோயைக் குணப்படுத்த தற்போது மருந்துகள் இல்லை

எபோலா: நோயைக் குணப்படுத்த தற்போது மருந்துகள் இல்லை

உலக சுகாதார ஸ்தாபனம்

உலகை அச்சுறுத்தும் ‘எபோலா’ வைரஸ் நோயை கட்டுப்படுத்த தற்போது சக்தி வாய்ந்த மருந்து எதுவும் இல்லை. வருகிற 2015ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது அடுத்த ஆண்டுக்குப் பின் நான் இதற்கான மருந்தை கண்டுபிடித்து விநியோகிக்க முடியும்.

இந்தத் தகவலை உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் ஜெனரல் மேரி - பால்கினி கூறியதாவது, உயிர் கொல்லி நோயான எபோலாவை கட்டுப்படுத்தி குணப்படுத்தக் கூடிய மருந்தை தயாரிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாகோஸ்மித் கிலைன் என்ற மருந்து கம்பனி முன் வந்துள்ளது.

இதற்கான பரிசோதனை அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்கப்பட உள்ளது. தற்போது மாப்பயோ பார்மசிகல் என்ற நிறுவனமும் மருந்து தயாரித்துள்ளது.

அதை ‘எபோலா’ வைரஸ் நோயால் ஆபிரிக்காவில் பாதிக்கப்பட்ட 2 அமெரிக்கர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.

இதற்கிடையே உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் கூட்டம் நேற்று நடைபெற ஏற்பாடாகி இருந்தது. இக் கூட்டம் மேரிபால் கிளி தலைமையில் நடக்கிறது. அதில் உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொள் கின்றனர்.

அந்த கூட்டத்தில் இந்த மருந்தை எபோலா வைரஸ் நோயாளர்களுக்கு செலுத்துவது குறித்து முடிவு செய்யப்படு கிறது என்று அவர் கூறினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]