ஹிஜ்ரி வருடம் 1435 ரஜப் மாதம் பிறை 08
ஜய வருடம் சித்திரை மாதம் 25ம் நாள் வியாழக்கிழமை
THURSDAY, MAY , 08, 2014

Print

 
இமாமுல் அரூஸ் அல்லாமா ஸெய்யிது முகம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரழி) அவர்கள்

இமாமுல் அரூஸ் அல்லாமா ஸெய்யிது முகம்மது மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரழி) அவர்கள்

முஹர்ரம் பிறை 20 ஹிஜ்ரி 1232ல் ஸெய்யிது முகம்மது என்ற இயற் பெயரோடு உலகைக் கண்ட இவர்கள் பிற்காலத்தில் குதுபுஸ்ஸமான் அல் இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை ஆலிம் (ரழி) என்ற உயர் அந்தஸ்துப் பெற்ற மாமனிதராக மக்கள் மனதில் மங்காப் புகழ் பெற்றார்கள்.

தென் இந்திய காயல்பட்டணத்தில் பிறந்த ஆலிமுல் அரூஸ் (ரழி) அவர்கள் தனது இரண்டாவது வயதிலேயே கீழக்கரையில் குடியே றினார்கள். தந்தையின் மேற்பார்வை யின் கீழ் ஆரம்பக்கல்வியை அரூஸி யதுல் காதிரியா தைக்காவில் கற் றார்கள். அறிவும், ஆற்றலும் நிறைந்து காணப்பட்ட இவர்கள் தனது ஒன்பதாவது வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் என்ற பெருமைக்கு தன்னை உரித்தாக்கிக் கொண்டார்கள்.

அரபு மொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் இலக் கணம், இலக்கியம், பிக்கு என்னும் (மார்க்க சட்டம்) ஆகியவற்றையும் அரூஸியதுல் காதிரியா தைக்காவி லேயே கற்று அடக்க ஒடுக்கமான ஒழுக்கப்பண்போடு நிகழ்ந்து மக்கள் மனதில் நிரந்த இடம் பிடித்துக் கொண்டார்கள். கீழக்கரை சின்ன தைக்காஸாஹிப் வொலியுள்ளா அவர்களிடம் தத்துவ ஞானம், வான சாஸ்திரம், தர்க்கசாஸ்திரம் வரலாறு போன்ற கலைகளையும் கற்று பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி பெற்றார்கள்.

கண்ணனூர், தலைச்சேரி, பொன் னானி போன்ற நகரங்களையெல் லாம் தரிசித்து அங்குள்ள மேதை களின் நல்லாசிகளை பெற்றுக் கொண்ட இவர்கள் உருது, பார்ஸி, அரபு, தமிழ் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றார். இவர்கள் பள்ளிப் பருவத்திலேயே கவிதை. கஸல், பைத்துக்கள், பாக்கள் இய ற்றும் திறமை பெற்று பெருமை பெற்றார்கள். அல்லாஹ்வினதும், அவனின் திருத் தூதர் ரஸ¥ல் (ஸல்) அவர்களினதும் ஏவல் விலக்கல்களை விட்டு சிறிதும் விலகாது வாழ்ந்து காட்டிய பெரி மைக்குரியவர்கள் அல்லாமா மாப் பிள்ளை லெப்பை ஆலிம் (ரழி) அவர்கள்.

அறிவு, நல்லொழுக்கம் உள்ளம் கவரும் குணப்பண்புகள் என்பவற் றால் தைக்காஸாஹிப் வொலியுள் ளாஹ் அவர்களின் மனதைக் கவர்ந்த இமாமுல் அறூஸ் அவர்களை தன் மருமகன் ஆக்கிக் கொள்வதற்கு ஆசைப்பட்டு அன்னாரின் இருபத்தி யோராம் வயதில் அதாவது ஹிஜிரி 1253 றபியுல் அவ்வல் பிறை 17ல் ஸாரா அம்மையாரை மணமுடித்து வைத்து இமாம் அறூஸ் நாயகத்தை தன் மருமகனாக்கிக் கொண்டார் கள்.

“மாப்பிள்ளை லெப்பை ஆலிம்” என்ற சிறப்புப் பெயர் வரக் காரண மாக அமைந்த சம்பத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் எனக் கருதுகிறேன். பல்வேறு தேவைகளுக் காக தன் அருமை மருமகனை மதிப் புக்குரிய மாணவரை அழைத்து வரப் பணிக்கும் போது ஏனைய மாண வர்களிடத்தில் தைக்காஸாஹிப் வெலியுள்ளா அவர்கள் “ஆலிம் ஸாஹிப் அவர்களை அழைத்து வருக” எனப் பணிப்பாளர்கள் ஒரு சமயம் ஒரு மாணவன் எந்த ஆலிமை என்று கேட்க மாப்பிள்ளை லெப்பை ஆலிமை” என்று கூறிவிட்டார்கள் அன்று தொட்டு “மாப்பிள்ளை லெப்பை” என்ற சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கலானார்கள் ஆலிமுல் அறுஸ் நாயகம் அவர்கள்.

இலங்கையில் இஸ்லாம் பரவ லாக்கப்படுவதற்காக தீவின் நாலா பாகங்களுக்கும் சென்று மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் என்று 350க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிய மகான் அவர்களின் பணியில் முக்கிய தலங்களின் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம் எனக் கருதுகிறேன்

கி. பி. 1881 இல் கொழும்பு மாநகரில் சோனகத் தெருவில் மஃனமுல் ஸ¤அதா இன்று தரீக்கா வின் தலைமைப்பீடமாகும். 1883 மருதானை புகாரி தக்கியா 1884 இல் வெலிகம புகாரி மஸ்ஜித், 1885 இல் வெலிப்பிட்டிய அறூஸியா தைக்கா 1886 இல் மஆறுல் கைறாத் அனூஸியா தைக்கா 1887 இல் காலி மிலித்துவை முஹிதீன் மஸ்ஜித் 1888 இல் மாத்தறை அறூஸியா தைக்கா 1889 இல் காலி கட்டுகொடை மஃனமூ அப்கல் ஹம்து அறூஸிய தைக்கா 1894ல் கிந்தொட்டை ஹுஸைன் தைக்கா என்று அன்னாரின் சன்மார்க்கப் பணியை அடிக்கிக் கொண்டே போகலாம்

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (ரழி) குர்ஆன் ஹதீஸ் கலை என்பவற்றுக்கு தெளிவு பெறுவதற் காக விட்டுச் சென்றுள்ள அரும்ப டைப்புகளான பதுஹுத்தையான், பத்ஹ¥ஸ்ஸலாம், பத்ஹ¥ல் முயீன், பதுஹுல் மஜீத் ஆகிய அரும்படைப் புக்கள் இன்றும் முஸ்லிம்கள் தெளிவு பெறுவதற்கு போதுமான பொக்கி ஷங்களாகும். ஹிஜ்ரி 1316 ரஜப் பிறை 5இல் தனது 84 வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]