|
||
ஹோலி குரோஸ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி
நாவிதன்வெளி கல்விக் கோட்டத் திலுள்ள கமு/சது/ஹோலி குரோஸ் மகா வித்தியாலயத்தின் (புனித திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின்) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (15.2.2014) பிற்பகல் 2.30 மணிக்கு சொறிக்கல்முனை சாந்த குரூஸ் மைதானத்தில் இடம் பெறவுள்ளது. இவ் வித்தியாலய அதிபர் எஸ்.பிரகதீஸ்வரன் தலைமை யில்இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் பொ. பியசேன ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஹாசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். இராஜேஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். புஸ்பராசா ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொள்வர். இந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது டெய்லி இல்லம் (பச்சை), டிசெல்ஸ் இல்லம் (மஞ்சள்), செல்வா இல்லம் (சிவப்பு) என்பவற்றுக்கிடையே இடம்பெற வுள்ளதாக விளையாட்டுக் குழு செயலாளரும், உடற் கல்வி ஆசிரியருமான ஏ. சுதர்சன் தெரிவித்தார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |