ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014

Print

 
பறக்கும் சக்தி

பறக்கும் சக்தி

மூன்று வகையான உயிரினங்களால் பறக்க முடியும். பறவைகள், வெளவ்வால்கள் மற்றும் பு+ச்சிகள். பறவைகள்தான், சிறந்த பறப்பான்கள். காரணம், அவைகளின் சிறகுகள் நீண்ட மெல்லிய சிறகுகள் அல்லது சிறிய மிருதுவான சிறகுகள். பறவையின் உடலின் பெரும் பகுதிகளை சிறகுகள் சு+ழ்ந்துள்ளன.

சிறகுகள் சு+ழாத பறவையின் பகுதிகள் அதன் அலகு, கண்கள் மற்றும் கால்கள் மட்டுமே. பறவையின் உடம்பை மூடுவது மட்டுமல்லாமல், பல வேலைகளை சிறகுகள் செய்கின்றன. சிறகுகள் பறவையை கதகதப்பாகவும், உலர்ந்தும் வைத்து இருப்பதோடு வானில் பறக்கவும் செய்விக்கிறது.

காற்றின் சக்தி: காகிதத்தின் மீது மிக வேகமாக ஊதும் போது, காகிதத்தின் மேல் பகுதியில் காற்று அதன் கீழ் பகுதியை விட வேகமாக நகரும். இந்த வகையில் காற்றில் ஏற்படும் வேறுபாடு காகி தத்தை மேல் நோக்கி தூக்க செய்கிறது.

அது போன்றே பறக்கும் பறவையின் மேல் பகுதி, அதன் கீழ்பகுதியை விட வேகமாய் நகருகிறது. இந்த காற்றின் செயல்பாடே பறவையை மேல் நோக்கி உயர செய்து பறக்க வைக்கிறது.

பறக்கும் விதம்: பறப்பது என்பது கடின வேலை. எல்லா பறவைகளும் எல்லா நேரமும் சிறகுகளை அடிப்பதில்லை. சில பறவைகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறகடிப்பதை நிறுத்தி சக்தியை சேமிக்கின்றன.

காற்றால் தடுக்க முடியாது: ஒவ்வொரு பறக்க உதவும் சிறகும் இலட்சக்கணக்கான நுண்ணிய இழைகளை கொண்டிருக்கும். இவை ஒன்றுக்கு ஒன்று சேர்ந்து சிறகிற்கு வடிவம் தருகிறது. கடுமையான காற்றடிப்பின் போதும் இவை தாக்குபிடிக்க வைக்கும்.

சிறகடிக்கும் விமானங்கள்: இந்த புறாக்கள் பறக்கையில் சிறகடித்து அதன் சிறகுகளை கீழே இறக்கும்போது அதன் சிறகுகள் மூடி கொண்டு காற்றை எதிர்த்து நகர உதவு கிறது. சிறகுகள் மேலே போகும்போது சிறகுகள் திறந்து கொண்டு காற்றை கடக்க செய்கிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]