ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 14
விஜய வருடம் மாசி மாதம் 03ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 15, 2014
வரு. 82  இல. 40
 

தேசிய தொலைக்காட்சி வரலாற்றில் தமிழ் ஒளிபரப்பு ஓர் இமாலயம்

தேசிய தொலைக்காட்சி வரலாற்றில் தமிழ் ஒளிபரப்பு ஓர் இமாலயம்

முதல் தமிழ் செய்தித் தயாரிப்பாளர் என்ற பெயரை ஜோர்ஜ் சந்திரசேகரனும், தமிழ் செய்தி அறிவிப்பாளர் என்ற பெயரை கமலா தம்பிராஜாவும் இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் பதிவு செய்து கொண்டுள்ளனர். சில வாரங்களில் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ் அறிவிப்பாளரான மனோகரி சதாசிவம், வீ.என்.

மதி யழகன் ஆகியோர் செய்தி வாசிப் பதில் இணைந்து கொண்டனர். அதேபோன்று செய்தி தயாரிக்கும் பணியில் இன்னும் இரண்டு தமிழ் தயாரிப்பாளர்கள் இணைந்து கொண்டனர். ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தைச் சேர்ந்த சில்வெஸ்டர் எம். பாலசுப்ரமணியம், அருணா செல் லத்துரை ஆகியோரே அந்த தயாரிப் பாளர்களாவர்.

ரூபவாஹினி சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டதும், நேரடி செய்தி ஒளிபரப் புக்களாக தேசிய தொலைக்காட் சியின் தமிழ்ச் செய்தி ஒளிபரப்பு விரிவடைந்தது.

செய்திப் பிரிவில் தமிழ் செய்தி களுக்கான தயாரிப்பாளர்களாக சில்வெஸ்டர் எம்.பாலசுப்ரமணியம், அருணா செல்லத்துரை ஆகியோரும், சிங்கள செய்தித் தயாரிப்பாளர்களாக எல்மோ பெர்னாண்டோ, கே.டீ. தர்மவர்தன, முஹமட் யஹியா, எஸ்.எச்.விமலசேன ஆகியோரும், ஆங்கில செய்தித் தயாரிப்பாளர்களாக ஷாமினி சண்முகம், அர்ஜுண ரணவன, ரவிநாத் ஆரியசிங்க ஆகியோரும் பணியாற்றினார்கள். பின்னர் 1983 இல் ஏ.எம்.ஐயூப் இணைந்து கொண்டார்.

1982 களின் பின்னர் தமிழ் செய்தி வாசிப்பில் ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த கமலா தம்பிராஜா, மனோகரி சதாசிவம், வீ.என்.மதியழகன் ஆகியோரைத் தொடர்ந்து ஆயிஷா ஜுனைதீன், எஸ்.விஸ்வநாதன், பீ.விக்னேஸ்வரன், ரiத் எம்.ஹபீள் ஆகியோரும் இணைந்து கொண்டார்கள்.

1986 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து தமிழ் ஊழியர்களினதும், கூட்டுத்தாபனத்தினதும் பாதுகாப்புக் கருதி அரசு தமிழ் ஊழியர்களை விசேட லீவில் அனுப்பியது.

இவ் வேளையில் செய்தி ஒளிபரப்புப் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் பணி, தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திரு.யூ.எல்.யாக்கூப் மற்றும் செய்திப் பிரிவில் பணிபுரிந்த ஏ.எம்.ஐயூப் ஆகியோரிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அத்துடன், ஏ.எம்.ஐயூப் செய்திகளைத் தயாரித்து வந்தார். ரiத் எம் ஹபீள், யூ.எல்.யாக்கூப் ஆகியோர் செய்தி வாசித்தார்கள். பின்னர் பல மாதங்களில் தமிழ் ஊழியர்களின் மீள் வருகைக்குப் பின்னர் வழமைபோல் பணிகள் இடம்பெற்றன.

பின்னாளில் நடராஜ ஐயர், ஜயந்திமாலா அருள் செல்வநாயகம், எஸ்.சண்முகரட்ணம், யூ.எல். யாக்கூப், ஜோக்கிம் பெர்னாண்டோ, அஷ்ரப் சிஹாப்தீன், ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, சனூஸ் மொஹம்மத், நடேச சர்மா, ரேலங்கி செல்வராசா, உமாசந்திரா முத்தையா, ரதி கிறிஸ்தோகு, வாசுகி சிவகுமார், சாந்தினி கருணைரத்தினம், எம்.என்.ராஜா, ரஞ்சனி ராஜ்மோகன், துஸ்யந்தி மோகனதாஸ், எம்.ஐ. சிஹாமூதீன், இர்ஷாத் ஏ காதர், கிஷா கெளரி இளங்கோவன், கவிதா யாளினி அமலதாஸ், எச்.அஹமட், கலீலுர்ரஹ்மான், நாகபூஷணி கருப்பையா, ரஜனி விக்டர், சீ.பி.எம்.ஷியாம், சீ. கிருபாகரன், ஏ.எல்.இர்பான், இர்பான் மொஹமட் ஆகியோரும் செய்தி வாசிப்பில் பணியாற்றினார்கள்.

2002ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி தமிழ் செய்திகளுக்கென்று ஒரு தனிப்பிரிவு இல்லாதிருந்த செய்திப் பிரிவில் தமிழ் செய்திகளுக்கு ஒரு தனி அலகு ஏற்படுத்தப்பட்டு அப்பிரிவின் முதலாவது உதவிப் பணிப்பாளராக யூ. எல்.யாக்கூப் (கட்டுரையாளர்) நியமனம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட நடவடிக்கை களின் பயனாக தமிழ் செய்திகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தமிழ் செய்திகள் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பத் தொடங்கியது. அத்துடன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்களச் செய்திகளின் தமிழாக்கத்தையே வழமையாகக் கொண்டிருந்த தமிழ் செய்திகளில் தமிழ்ப் பிரதேசங்களின் செய்திகள், வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் அன்றாட வாழ்க்கை முறை, அபிவி ருத்தி, அரசியல் நடவடிக்கைகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கப் பட்டன. திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், கொழும்பு, நுவரெலியா ஆகிய பிரதேசங்களுக்கு தமிழ் பேசும் பிர தேச செய்தியாளர்கள் நியமிக்கப் பட்டார்கள். இரவு 7 மணிச் செய்தி அறிக்கைக்குப் புறம்பாக பகல் 1.30க்கு மற்றுமொரு தமிழ் செய்தி அறிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி