ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 07
விஜய வருடம் தை மாதம் 26ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 08, 2014

Print

 
25-65 வயது இடைப்பட்டோருக்கு மட்டுமே இனிமேல் பஸ் சாரதி அனுமதிப்பத்திரம்

25-65 வயது இடைப்பட்டோருக்கு மட்டுமே இனிமேல் பஸ் சாரதி அனுமதிப்பத்திரம்

புதிய சட்ட பிரமாணம் அறிமுகம்

பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டிகளே அதிக மாக இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு காரணமாக இருப்பதனால் போக்குவரத்து அமைச்சு பஸ் சாரதிகளுக்கான புதிய தகுதிகளை அமுலாக்குவதென்று தீர்மானித்துள்ளது.

25 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு மாத்திரமே பஸ் சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க வேண்டுமென்ற புதிய சட்டப்பிரமாணத்தை போக்குவரத்து அமைச்சு அமுலாக்க இருக்கிறது.

இதே வேளையில், குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் நீதிமன்றம் ஒன்றினால் தண்டிக்கப்பட்டவர்களுக்கும் பஸ்களை செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்கக்கூடாதென்றும் இந்த சட்டப் பிரமாணங்கள் வலியுறுத்துகின்றன.

இரண்டு ஆண்டுகள் வாகனங்களை ஓட்டிய அனுபவமுடையவர்களே பஸ் சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியுமென்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தில் இருந்து வைத்திய சான்றிதழைப் பெற்ற பின்னரே இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமென்றும் இந்த சட்டப் பிரமாணங்கள் வலியுறுத்துகின்றன.

பஸ் ஒன்று இடைவெளியில் இயந்திரக் கோளாறினால் ஓட முடியாத நிலை ஏற்பட்டால் பயணிகளுக்கு அசெளகரியம் ஏற்படாத வகையில் இயந்திர கோளாறுகளை கூடிய விரைவில் திருத்தம் செய்வதற்கான பயிற்சியை பஸ் சாரதிகள் பெற வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது.

இத்தகைய கடுமையான நிபந்தணைகளின் அடிப்படையில் திறமை மிக்கவர்களுக்கே இனிமேல் பஸ் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் அதனால், பஸ் விபத்துக்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைத்துவிட முடியுமென்று போக்குவரத்து அமைச்சு நம்பிக்கை வைத்திருக்கிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]