ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 07
விஜய வருடம் தை மாதம் 26ம் நாள் சனிக்கிழமை
SATURDAY, FEBRUARY , 08, 2014

Print

 
நேற்றைய எதிரிகளை அரவணைத்து சமாதானத்தை ஏற்படுத்தினால் நாடு வளம்பெறும்a

நேற்றைய எதிரிகளை அரவணைத்து சமாதானத்தை ஏற்படுத்தினால் நாடு வளம்பெறும்a

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட பாப்பரசர் பிரான்ஸிஸ் விடுத்த செய்தி

கொழும்பு அதிமேற்றிராணியார் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிற்கு இலங்கை வருமாறு விடுத்த அழைப்பினை அவர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டிருப்பதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது. இத்தாலியிலுள்ள இலங்கையரை கடந்த சனிக்கிழமை சந்தித்த பரிசுத்த பாப்பரசர் தான் இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்நாட்டில் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் குணமாக வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மெல்கம் ரஞ்சித் கருதினால் தலைமையில் வத்திக்கான் சென்றிருந்த இலங்கை பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய பரிசுத்த பாப்பரசர் இந்த வேண்டுகோளை தான் ஏற்றுக்கொண்டதாகவும் இறைவனின் ஆணைக்கேற்ப தான் இலங்கை செல்ல விரும்புவதாகவும் கூறினார். 26 வருட சிவில் யுத்தத்தினால் பலரும் வேதனைக் கண்ணீர் சிந்தியிருப்பது குறித்து கவலை தெரிவித்த பரிசுத்த பாப்பரசர் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவது இலகுவான செயல் அல்லவென்றும் வேதனை வடுக்களை நாம் ஒத்துழைப்புடன் குணமாக்க வேண்டுமெனவும் நேற்று எதிரிகளாக நினைத்தவர்களை இன்று சகோதர உணர்வுடன் அரவணைத்து செயற்பட்டாலே நாடு வளம் பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]