ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 04, 2014

Print

 
ஹொலிவுட் நடிகர் ஹாப்மன் மரணம்

ஹொலிவுட் நடிகர் ஹாப்மன் மரணம்

ஒஸ்கர் விருது பெற்ற அமெரிக்க நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மன் காலமானார்.

46 வயதான இவர் நியூயோர்கில் உள்ள தனது அபார்ட் மெண்டில் இறந்து காணப்பட்டார்.

அவரது மறைவிற்கு அவரது சக நடிகர்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர் அளவிற்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதாக தாங்கள் நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டில் பிலிப் நடித்து வெளியான ஓனிங் மாஹோனி என்ற திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய பிரிட்டிஷ் நடிகர் ஜோன் ஹாட் இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது மரணம் ஒரு 'பேரதிர்ச்சியை தந்த இழப்பு' என்றும் திரைத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு பிரம்மாண்டமானது என்றும் நடிகர் ஜோன் ஹாட் விவரித்தார்.

கழ்பெற்ற ஹொலிவுட் நடிகர் டொம் ஹான்க்ஸ் மறைந்த நடிகர் பிலிப் ஒரு மாபெரும் திறமைசாலி என்று விவரித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில் வெளியான கபோட்டி என்ற ஆங்கில திரைப்படத்தில் ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்த பிலிப் சீமோர் ஹாப்மனிற்கு சிறந்த நடிகருக்கான ஓஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஒஸ்கார் விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான பிரிவுக்கு மூன்று முறை இவர் பரிந்துரைக்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]