ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 04, 2014

Print

 
உலகின் வயதான செந்நாரை இறந்தது

உலகின் வயதான செந்நாரை இறந்தது

உலகில் மிக வயதான செந்நாரை தனது 83 ஆவது வயதில் அவுஸ்தி ரேலியாவில் இறந்துள்ளது.

பக்கவாதம் மற்றும் முதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்த இந்த செந்நாரை கடந்த வெள்ளிக்கிழமை இறந்ததாகக் அடிலைட் மிருகக் காட்சிசாலை அதிகாரிகள் குறிப்பிட்டனர். விசேடமான உணவு முறையைக் கொண்ட இந்த பறவையின் வாழ்நாள் மிகக் குறைவானதாகும்.

இறந்திருக்கும் இந்த செந்நாரை 2008 ஆம் ஆண்டில் இளைஞர் குழு ஒன்றினால் தாக்கப்பட்டு மோசமான நிலையிலேயே மீட்கப்பட்டிருந்தது. தெரிந்தவரையில் இதுதான் உலகின் மிக வயதான செந்நாரையாகும் என்று தென் அவுஸ்திரேலிய மிருக காட்சிச் சாலைகளுக்கான தலைவர் எலைன் பென்ஸ்டட் ஏ. எப். பி. செய்திச் சேவைக்குக் குறிப்பிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]