ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 04, 2014

Print

 
நேகம முஸ்லிம் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

நேகம முஸ்லிம் வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

அ/நேகம முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் இம்மாதம் 06ஆம் திகதி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் எஸ். ஏ. நிஸார்தீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் ஜெஸ்மின், ரோஸ், லோட்டஸ் என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதுடன், இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக விசேட வேலைத்திட்ட அமைச்சர் எஸ். எம். சந்திரசேன கலந்துகொள்ளவுள்ளதுடன் விசேட அதிதியாக வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ். எம். ரஞ்சித் சமரகோன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]