ஹிஜ்ரி வருடம் 1435 ரபீஉனில் ஆகிர் மாதம் பிறை 03
விஜய வருடம் தை மாதம் 22ம் நாள் செவ்வாய்க்கிழமை
TUESDAY, FEBRUARY , 03, 2014
வரு. 82  இல. 29
 

நல்ல தங்காள் நாடகத்தில் 7வது மகனாக எம்.ஜp.ஆர்

நல்ல தங்காள் நாடகத்தில் 7வது மகனாக எம்.ஜp.ஆர்

இந்த நாடகம் இந்த தேதியில் இந்த கிழமையில் நடைபெறும் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. அந்தக் காலத்தில் சினிமாவைவிட நாடகங்கள் தான் அதிகம். ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு நாடகங்கள் நடத்தி வந்தார்கள்.

சில ஊர்களில் சில கிராமங்களில் இம்மாதிரி நாடகங்கள் நடக்கும் போது, நாடக கொட்டைகளில் மின்சார வசதி இருக்காது. மைக் இருக்காது பெட்ரோமாஸ் லைட்களும் மண்ணெண்ணெய் லைட்களும் தான் எங்கும் இருக்கும். நாடகத்தில் நடிப்பவர்கள் வசனங்களையும், பாடல்களையும் மிக சத்தமாக பேச வேண்டும். நாடகம் நடக்கின்ற அன்று நாடகத்தைப் பார்க்க வந்த மக்கள் கூட்டம் மிக மிக அதிகம்.

நாடகம் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் நல்லதங்காள் தன் குழந்தைகளை கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்லும் காட்சி மேடைக்கு வருகிறது. ஏழு குழந்தைகளையும் மேடையில் அமைக்கப்பட்ட கிணற்று பக்கத்தில் நிற்க வைத்துவிட்டு கிணற்றில் தண்ணீர் இருக்கின்றதா? கிணற்றில் போட்டால் குழந்தைகள் செத்துப் போய் விடுமா என்று கிணற்றை நோக்கிப் பார்க்கிறார்.

கதையில் அமைப்பின்படி வாழ்க்கையில் தோல்வி அடைந்த நல்லதங்காள் தான் பெற்ற மனம் வெறுத்து 7 குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் சாக வேண்டும் என்ற முடிவோடு கிணற்றை பார்க்கின்றார். அதன்படி தன்னுடைய குழந்தைகளைக் கட்டி அழுகிறார். அந்த நேரத்தில் நாடகத்தை பார்க்கின்ற bபாது மக்ஜீளிடமிருந்து ஒரு சிறிய சத்தம் கூட கேட்கவில்லை.

இது ஒரு முக்கியமான பெரிய அம்சமான காட்சி, மேடையின் திரையின் உள்பகுதியில் நாடகத்தில் அமைப்பாளரும் முதலாளியும் மற்ற திரைகளை ஏற்றி இறக்கும் தொழிலாளிகளும் மிக கவனத்தோடு தயாராக இருக்கிறார்கள். இப்போது நல்லதங்காள் ஒவ்வொரு குழந்தையாக கிணற்றில் தூக்கி போடுகிறார்.

7வது குழந்தையாக எம். ஜி ஆரை தூக்கி கிணற்றில் போட வேண்டும். தனக்கு முன் 6 குழந்தை கிணற்றில் போட்டு கொண்டு இருக்கும் காட்சியைப் பார்த்த எம். ஜி. ஆர் தன்னிடம் அந்தத் தாய் வரும்போது தாயின் பிடியில் அகப்படாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டார். இதை அறிந்த கம்பெனி முதலாளியும் நாடக இயக்குனரும் திரைக்கு மறைவில் நின்று கொண்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து போய் பையனை எப்படியாவது அழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பையன் ஓடி திரை அருகே வரும் போது தன் கையில் இருந்த பிரம்பால் தலையில் ஓங்கி அடித்து விடுகிறார்கள்.

அந்த அடியின் வலி தாங்க முடியாமல் எம். ஜி. ஆர். அம்மா, அம்மா என்று பலத்த குரலில் கிணற்றை சுற்றி சுற்றி வரும்போது தன் தாயான நல்லதங்காள் இவனை பிடித்து விடுகிறாள். பிடித்தவுடனே அந்த பையன் அம்மா என்னை கொன்றுவிடாதீர்கள் என்னை கொன்று விடாதீர்கள் என்று பலத்த குரலில் கத்துகிறான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி