ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

கண்டலம நீர்த்தேக்க பிரதேசத்தில் சூழல் பாதுகாக்கப்பட கோரிக்கை

கண்டலம நீர்த்தேக்க பிரதேசத்தில் சூழல் பாதுகாக்கப்பட கோரிக்கை

வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பயணிகள் அதிகளவில் வந்து குவியும் தம்புள்ள கண்டலம நீர்த்தேக்கப் பிரதேசத்தில் கடும் சூழல் மாசுபடுத்தப்படும் செயலைத் தடுக்க சம்பந்தப்பட்ட பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேசவாசிகள் கடும் விசனத்தைத் தெரிவிக்கின்றனர்.

கண்டலம நீர்த்தேக்கப் பிரதேசம் தமது நிர்வாக எல்லைப் பிரிவில் இருந்தாலும் இது ஸ்ரீலங்கா மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமாக இருப்பதனால் தமக்கு எதுவும் செய்ய முடியாது என தம்புள்ள பிரதேச சபை தெரிவிக்கிறது.

கண்டலம பிரதேச சூழலில் இடம்பெற்று வரும் சூழல் மாசுபடுத்தும் நடவடிக்கையைத் தடுக்க தம்புள்ள பிரதேச சபைக்கு நடவடிக்கை எடுக்க முடியுமாயினும் அவர்கள் செயலிழந்து இருப்பதாக மகாவலி அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் கணடலம பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சூழல் மாசுபடுத்தல் செயலைத் தடுக்க சாக்குப் போக்கு கூறும் அரச பிரிவு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதிருப்பதை இப்பிரதேச வாசிகள் கடும் விசனத்துடன் புகார் செய்கின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி