|
||
சீனன் கோட்டை சன்ரைஸ் அரையிறுதிக்கு தகுதி
களுத்துறை லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் முன்னணி 03 விளையாட்டுக் கழகங்களை வெற்றி கொண்டு சீனன் கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேற்படி லீக் சுற்றில் களுத்துறை யூத் விளையாட்டுக் கழகத்தை 5-0, பாணந் துறை இராணுவ அணியை 1-0 மற்றும் அட்டுளுகம புளூடயமன்ட் அணியை 4-0 என்ற வித்தியாசத்தில் சீனன் கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள் ளதாக கழக செயலாளர் கிஸான் ஹாசிம் தெரிவித்தார். அத்துடன் மேற்படி சுற்றுப் போட்டியில் சிறந்த வெற்றியை பெற்றுத் தந்த ஸன்ரைஸ் விளையாட்டுக்கழக அணித் தலைவர் பர்ஹத் அனஸ் தலைமையிலான விளையாட்டு கழக வீரர்களுக்கு சீனன் கோட்டை பிரதேச மக்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |