ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
மனத்திரையில் கண்ணதாசன்

மனத்திரையில் கண்ணதாசன்

மறைந்தும் உன்பெயர் மறையாப் புகழுடனெம்

மனத்திரையில் கவிபாடும் கண்ணதாசனே

நிறைமதியாய் நீவரைந்த நீதியொளிர் பக்திதரு

நகைச்சுவைத் தத்துவமிளிர்ப் பாடல்கள்

முறையாயெம் இளைஞர் முதியரை மகிழ்வித்து

முன்னேற்றம் பெற்றுயர உதவினவே

கரைகாட்டும் ஒளிவிளக்காய் கலங்கிய பலர்க்கு

கைகொடுத்த கண்ணா கவிமன்னா.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]