ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
ஐ. தே. க. தலைமைத்துவ சபை;பேச்சுவார்த்தை தோல்வி

ஐ. தே. க. தலைமைத்துவ சபை;பேச்சுவார்த்தை தோல்வி

* சஜித் நேற்று வரவில்லை

* ரணில் சார்பில் 12 யோசனைகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையை ஸ்தாபிப்பதற்காக நேற்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தைக்கு சஜித் பிரேமதாச சமுகமளிக்காததையிட்டே இது தோல்வியில் முடிவடைந்ததாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.தே. க. வின் தலைமைத்துவ சபையை ஸ்தாபிப்பது தொடர்பாக தேசிய பிக்கு முன்னணி முன்வைத்திருந்த 07 யோசனைகளுக்கும் மேலதிகமாக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிதாக 12 யோசனைகளை அதனுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.

கட்சித் தலைவர் பதவி விலகிய பின்னரே தலைமைத்துவ சபை ஸ்தாபிக்க வேண்டுமென தேசிய பிக்கு முன்னணி யோசனை முன்வைத்துள்ளது. இருப்பினும், தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிதாக சேர்த்துக்கொண்டிருக்கும் யோசனைகளின்படி, தான் பதவியில் இருக்கும் போதே இந்த சபை ஸ்தாபிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றார்.

இந்த யோசனைகள் அடங்கிய பிரதிகளை ரணில் விக்கிரமசிங்க, முறைப்படி கரு மற்றும் சஜித் ஆகியோரிடையே ஒப்படைத்திருக்கவில்லை. மாறாக யோசனைகளடங்கிய பத்திரிகையை அவர்களுக்கு வாசித்து மட்டுமே காட்டியுள்ளார். இதில் அதிருப்திக் கண்டமை காரணமாகவே சஜித் நேற்றைய பேச்சுவார்த்தைக்கு சமுகமளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]