ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
2014; வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று சபையில் சமர்ப்பிப்பு

2014; வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று சபையில் சமர்ப்பிப்பு

2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டறிக்கை இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படுகிறது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடுகிறது. இதன்போது பிரதமர் டி. எம். ஜயரத்தினவினால் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்ட றிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

2014 வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 29 வரை இடம்பெறும். குழு நிலை விவாதங்கள் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெற்று இறுதி வாக்கெடுப்பு அன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்காக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வர்த்தக துறையினர், பொதுமக்கள் அடங்கலான பல்வேறு துறையினரதும் கருத்துகள் பெறப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தரப்பினரையும் சந்தித்து இது தொடர்பில் ஆராய்ந்தமை தெரிந்ததே.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]