ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுபீ

டில்லி மாணவி வழக்கு;

குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுபீ

டில்லி மருத்துவ மாணவி வல்லுறவு, வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில் 2 பேர் தீர்ப்பு விவரங்களை தங்களுக்கு இந்தியில் மொழி பெயர்த்து தருமாறு டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

டில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இந்த வழக்கில் ஒரு குற்றவாளிக்கு சிறார் என்ற அடிப்படையில் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிறார் நீதிமன்றம். ராம்சிங் என்ற முக்கிய குற்றவாளி, திகார் சிறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். மற்ற 4 குற்றவாளிகளான முகேஷ் (26) அக்ஷய் தாக்கூர் (28), பவன் குப்தா (19), சர்மா (20) ஆகியோருக்கு டில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 13ம் திகதி மரணதண்டனை விதித்தது.

இந்நிலையில், முகேஷ் (26), பவன் குப்தா (19) ஆகிய 2 குற்றவாளிகள் தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்களை தங்களுக்கு இந்தியில் மொழி பெயர்ந்து தருமாறு டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு செய்துள்ளனர். இந்த மனு ஒக். 28 ல் விசாரணைக்கு வருகிறது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]