ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
பாகிஸ்தானின் அத்துமீறல்; சுஷில்குமார் ஷிண்டே இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்

பாகிஸ்தானின் அத்துமீறல்; சுஷில்குமார் ஷிண்டே இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு செல்கிறார்.

இந்த பயணத்தின்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைந்துள்ள இந்திய பாதுகாப்பு படை மையங்களுக்குச் சென்று அவர் பார்வையிடுவார்.

அதன் பின்னர் எல்லையில் நடைபெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இராணுவ உயர் அதிகாரிகள், ஜம்முகாஷ்மீர் மாநில முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் மாநில பொலிஸ் அதிகாரிகளுடன் ஷிண்டே ஆலோசனை நடத்துவார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]