ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

உலக சினிமா

உலக சினிமா

* முதன் முதலாக பெண் இயக்குனர் ‘டி.பி. ராஜலட்சுமி’யால் இயக்கப்பட்ட படம் ‘மிஸ் கமலா’. ஆண்டு 1936. கதை, வசனம், எழுதி தயாரித்தார்.

* கன்னட உலகில் ‘எம்.வி. ராஜம்மா’ என்பவரால் தயாரிக்கப்பட்ட படம் ‘ராதா ராமண்ணா’

* தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களே இல்லாத படம். ‘அந்த நாள்’ ஏ.வி.எம். தயாரித்தது.

* ஆண் குரல் பாடல்கள் மட்டுமே உள்ள படம் ‘ஒரு தலை ராகம்’.

* பெண் குரல் பாடல்கள் மட்டுமே உள்ள படம் ‘கற்பகம்’.

* முதல் கார்ட்டூன் சினிமாப் படம் 1938 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. தயாரித்தவர் ‘வால்ட் டிஸ்னி’.

* தமிழில் அதிக நாட்கள் ஓடிய படம் எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடி நடித்த ‘ஹரிதாஸ்’. இப்படம் சென்னை புரோட்வே திரையரங்கில் 110 வாரங்கள் ஓடின. மூன்று தீபாவளியைக் கண்ட ஒரே படம் இதுதான்.

* தமிழில் தயாரான முதல் ‘ஏ’ சட்டிபிகேட் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி!. ஆண்டு 1951. இயக்கியவர் ரீ.ஆர். ராம்நாத்.

l மறைந்த மலையாள நடிகர் பிரேம் நசீர் நடித்த முதல் படம் இன்றுவரை வெளிவரவில்லை. அந்தப் படத்தின் பெயர் ‘தியாக சீமா’.

* பிரேம் நசீர் நடித்து வெளிவந்த படம் ‘மருமகள்’. ஆண்டு 1952. 700 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸில் இடம் பிடித்தவர். அதில் 100 படங்களுக்கு மேல் நடிகை iலாவுடன் ஜோடியாக நடித்து சாதனை படைத்தார்.

* முதன் முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் எது தெரியுமா? 1936 ஆம் ஆண்டு வி.வி. சடகோபன் கதாநாயகனாக நடித்து லண்டனில் எடுக்கப்பட்ட படம் ‘நவயுவன் அல்லது கீதாசாரம்’.

* சண்முகானந்தா டாக்கீஸ் தயாரித்த ‘மேனகா’ என்ற படத்தின் மூலம் ‘கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்’ திரையுலகில் அறிமுகமானார். வெளிவந்த ஆண்டு 1935. தமிழின்

முதல் சமூகப் படமும் இதுதான்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி