ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
100 மணப் பெண்களின் கண்கவர் ஒய்யார நடை மற்றும் ‘கோப்பி மேசைப் புத்தகம்’

100 மணப் பெண்களின் கண்கவர் ஒய்யார நடை மற்றும் ‘கோப்பி மேசைப் புத்தகம்’
ஆகியவற்றுடன் Brides of Srilanka சஞ்சிகை தனது 25 ஆவது இதழை கொண்டாடுகின்றது

Brides of Srilanka (இலங்கையின் மணப் பெண்கள்) சஞ்சிகையானது தனது 25 ஆவது இதழ் வெளியிடப்படுவதை கொண்டாடும் முகமாக, இன்று வரைக்கும் மிகப் பெரியதும் மிகவும் நேர்த்தியானதுமாக திகழும் தனது ‘மணப்பெண்சார் கண்கவர் காட்சி’  (Bridal Show)  நிகழ்வை சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் ஒக்டோபர் 19 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5 மணிக்கு நடாத்தவுள்ளது.

நூறு மணப் பெண்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னணி வடிவமைப்பாளர்கள், ஒரு ‘ஆக்ரிலிட் சாய்தளம்’ மற்றும் மேடை, எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியிலான விசேட மாற்றவிளைவு நுட்பம், சம்பைன் மதுவகை மற்றும் நினைவு மலராக ஒரு ‘கோப்பி மேசை புத்தகம்’ (Coffee Table Book)  ஆகியவற்றை உள்ளடக்கியதாக நடைபெறுகின்ற Brides of Srilanka கண்கவர் காட்சியானது இதுபோன்ற ஒரேயொரு அனுபவமாக அமையும். அதுமட்டுமன்றி, ஒருபோதும் மறக்க முடியாத ஒரு செங்கம்பள நிகழ்வுக்கு புத்தம்புதிய திறமைகளோடு மிகச் சிறந்த மணப்பெண்சார் நவநாகரிக போக்குகளையும் இது கொண்டு வருகின்றது.

இந்த கண்கவர் காட்சியை முன்னின்று நடாத்துபவரான Brides of Srilanka முகாமைத்துவப் பணிப்பாளர் நெலும் ஹத்தெல்ல கூறுகையில் :-

‘இந்தத் தொழிலுக்குள் புதிதாக நுழைந்துள்ள இளம் திறமையாளர்களுடன் ஒன்றிணைந்து, இத் துறையில் ஏற்கனவேயுள்ள பழம்பெரும் சிரேஷ்ட ஆளுமைகளும் உருவாக்கிய மணப்பெண்சார் வடிவமைப்புக்களை இக் கண்கவர் காட்சி அழகுற காட்சிப்படுத்தும். வேறுபட்ட காலகட்டங்களைச் சேர்ந்த பெருமளவிலான வடிவமைப்பாளர்களது கைவண்ணங்களின் தெரிவுகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தும் விதத்திலமைந்ததும், இவ்வகையான ஒரேயொரு நிகழ்வாகவும் இது திகழ்கின்றது’ என்று தெரிவித்தார்.

இவ் வடிவமைப்பாளர்களுள், - ரமணி பெர்னாண்டோ, ஹரிஸ் விஜேசிங்க, கீர்த்தி சிறி, யோலன்ட் அலுவிகார, பெளசுல் ஹமீட், தர்சி கீர்த்திசேன, பூர்ணிமா ஆபேரத்ன, பிரேமசிறி ஹேவாவசம், ரம்ஸி ரஹ்மான், அஸ்லம் ஹுசைன், ரொமணி டீ சில்வா, ருச்சிர பெரேரா, றுவணி ஹேரத், சாலினி சிறிவர்தன, அனுஷா, பேர்ணி பாலசூரிய, ரொமேஷ் அத்தபத்து, தீபிகா குணசேகர, காந்தி மற்றும் சித்தாரா பெர்னாண்டோபுள்ளே, ஜானகி குருகுலசூரிய, வெடிங் ட்ரீம்ஸ், மிலான்சி, சுமுது வசந்த, சர்மினி ஒவிற்றிகம, அனுத்தார வீரசேகர, சரித் விஜேசேகர, அனுர திசாநாயக்க, பாரத இந்தீர, தனுஷ்க, சமிந்த நவரத்ன, டுல்ஸி ஹத்தெல்ல, இந்து கருணாரத்ன, இஷான் பிரியந்த, மரினா பெரேரா, மிச்செலி வன்லென்பேர்க், நீலிய மென்டிஸ், நேவமாலி சொய்சா, நிரோஷ வனசேகர, நிசி ஹந்துன்னெட்டிகே, பிரசாந்தி சல்காடோ, ரபுன்செல், றுவனி பெரேரா, சலொன் டுடெற்ற, சலூன் சோ கியூற், துஷாரி சமரநாயக்க, அன்பொக்டெபிள், லஸ்ஸன பெட்டிக், எசா வேவல, சலொன் சாமரி, இம்ரியாஸ் ஆசியன் டிசைனர்ஸ், வில்ஸ் டிசைன், பி. வி. எஸ். ஜயரத்ன உட்பட பலர் உள்ளடங்குகின்றனர். Brides of Srilanka சஞ்சிகையானது, கடந்த காலங்களில் பிரம்மிக்கத்தக்க கண்கவர் காட்சி நிகழ்வுகளை நடாத்தியமைக்காக புகழ்பெற்றுள்ளது.

இக் காட்சிகள் அனைத்தும் அதனது பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்களையும் மிதமிஞ்சியவையாக இடம்பெற்றன. இவ்வருட நிகழ்வும் அந்தப் பாரம்பரியத்தை அடியொற்றியதாகவே இடம்பெறவுள்ளது. அதேவேளை, மணப்பெண் மற்றும் திருமணம் தொடர்பான ‘கோப்பி மேசை புத்தகம்’ (Coffee Table Book)  ஒன்றையும் இலங்கையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இந்நிகழ்வு முடிவடைந்த உடனேயே அந்த நூலை கொள்வனவு செய்யக் கூடியதாக இருக்கும். ஒய்யார நடையில் பங்கேற்கின்ற மணப்பெண்களின் சிறப்புக்கள் இப்புத்தகத்தில் அற்புதமான புகைப்படங்களுடன் முழுப் பக்கத்தில் வர்ணித்து விபரிக்கப்பட்டிருக்கும், இலங்கையின் மிகத் திறமைவாய்ந்த திருமண மற்றும் நவநாகரிக புகைப்படப் பிடிப்பாளர்கள் ஏழு பேர் இதற்கான புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

திமித்ரி குறூஸ், ரசங்க திஸாநாயக்க, ஸ்ரூடியோ 3000ளிபி, ஸ்ரூடியோ யூ, தனுஷ் டி கொஸ்தா, மகேஸ் மன்னப்பெரும மற்றும் அரந்த சிரிமான்ன ஆகியோரே அந்த புகழ்பெற்ற புகைப்படப் பிடிப்பாளர்களாவர். நிகழ்வில் பங்கேற்கும் அதே மொடல் அழகி அல்லது மணப்பெண்ணை ‘அச்சிடப்பட்ட வடிவத்தில்’ கண்கவர் காட்சி நிகழ்வு முடிவடைந்தவுடனேயே பெற்றுக் கொள்ளக் கூடியதாக காணப்படும். அந்த வகையில் இது உலகில் முதன் முதலான ஒரு முன்னெடுப்பாக அமையும்’ என்று ஹத்தெல்ல பெருமிதமாக குறிப்பிட்டார்.

இத் துறையில் பிரபலமான ஆளுமைகளால் எழுதப்பட்ட திருமணங்கள் பற்றியதான ஒரு சில தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளையும் இந்த ‘கோப்பி மேசைப் புத்தகம்’ உள்ளடக்கியிருக்கும். அத்துடன், Brides of Srilanka சஞ்சிகை அறிமுகமானது தொடக்கம் அதனது 25 ஆவது இதழ் வரைக்குமான தனது சுயசரிதையை கட்டுரை மற்றும் புகைப்படங்களின் வடிவில் வாசகர்களுக்கு இது எடுத்துரைக்கும்.

எதிர்காலத்தில் மணப் பெண்ணாகவுள்ள ஒருவர் முன்னைய தலைமுறைகள் பற்றி இலகுவாக தெளிவு பெறுவதற்கு இப்புத்தகம் மிகப் பொருத்தமான ஒன்றாக காணப்படும். நட்சத்திர தரமிக்க ஹோட்டல்கள், சலூன் நிலையங்கள், உணவகங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் இப்புத்தகம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையால் மிக அதிக எண்ணிக்கையிலான வாசகர்களை அது சென்றடையும்.

கண்கவர் காட்சியைத் தொடர்ந்து இடம்பெறும் உபசார நிகழ்வின் போது ‘கோப்பி மேசைப் புத்தகத்தின்’ உத்தியோகபூர்வ அறிமுகம் இடம்பெறும். எவ்வாறிருப்பினும் ஆர்வமுள்ளவர்கள் 0115747575 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக முன்கூட்டியே ஓடர் செய்து கொள்ள முடியும். அல்லது மேலதிக விபரங்களுக்கு www.bridesofsrilanka.com  என்ற இணையத் தளத்தை பார்வையிடலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]