ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

சிறிய மற்றும் நடுத்தர தொழிலட் முயற்சியாளர்களின் தொழிற்பாடுகளை . . . .

சிறிய மற்றும் நடுத்தர தொழிலட் முயற்சியாளர்களின் தொழிற்பாடுகளை மேம்படுத்த
உதவும் சேவைகளை ஏ - ரேஞ்ச் பிரைவேட் லிமிட்டட் ஆரம்பிக்கும்

rpறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு  (SME) உதவி வழங்குவதிலும் அவற்றின் வணிக வளங்கள் மற்றும் தொழிற்பாடுகளை ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான தெளிவான, செயற்றிறன்மிக்க வழிகளை கண்டறிவதிலும் அர்ப்பணிக்கப்பட்ட சேவை வழங்குனராக திகழும் எ - ரேஞ்ச்  (A - range)  நிறுவனமானது இலங்கையில் தனது நடவடிக்கைகளை அண்மையில் ஆரம்பித்துள்ளது.

ஏ-ரேன்ஞ்ச் ஸ்தாபகரான
டசுன் அபேசேகர

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தமது உற்பத்தித் திறன் மற்றும் சந்தை அடைவு மட்டம் என்பவற்றை செயற்றிறன்மிக்க விதத்தில் அதிகரித்துக்கொள்வதை நோக்காகக் கொண்டு, அவ்வாறான நிறுவனங்களுக்கு சேவை வழங்குவதில் ஏ-ரேன்ஞ்ச் கம்பனி நிபுணத்துவம் பெற்றுள்ளது.

தமது வணிக தொழிற்பாடுகளின் தராதரத்தை மேம்படுத்தும் தேவையுடன் இருக்கின்ற மற்றும் நடைமுறைச் சாத்தியமானதும் செலவுச் சிக்கனமானதுமான சாத்தியக் கூறுகளை கண்டறிந்துகொள்ள விருப்பம் கொண்டுள்ள இலட்சியமுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போது ஏ-ரேஞ்ச் நிறுவனத்தின் சேவையை நாட முடியும்.

‘சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் பல வெற்றிகரமானவையாகவும் இலாபம் உழைக்கின்றவையாகவும் காணப்படுகின்ற போதிலும், மேலும் சில தொழில் முயற்சிகள் அவற்றினது உரிமையாளர்களின் துறைசார் அறிவுடனோ அல்லது அறிவின்றியோ, உகந்த சூழ்நிலைகளுக்கும் குறைவான மட்டத்திலேயே இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

அதிகமானவர்கள் மேற்கொள்ள முன்வராதிருக்கும் ஒரு முன்முயற்சியை  (‘Rock the Boat’)  செய்வதில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற உணர்வும் அதேபோன்று பொருளாதார மற்றும் நிதியியல் ரீதியாக தமக்கு பாதுகாப்பென கருதும் ஒரு திருப்திகரமான மனநிலையும் ஒன்றாக சேர்ந்ததன் விளைவாகவே பெரும்பாலும் மேற்படி நிலைமை ஏற்படுகின்றது.

இதுவே உண்மையான நிலைவரமாகும். அதிலும் குறிப்பாக, தமது தொழிற்பாடுகளின் மட்டத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பெல்லை காணப்படுகின்றது என்பதை அறிந்தவர்களாக இருக்கின்ற தொழில் முயற்சியாளர்களைப் பொறுத்தமட்டில் இது மிகவும் உண்மையானதாகும். எவ்வாறிருப்பினும், மேலும் வளர்ச்சிபெறும் விதத்தில் தமது தொழிற்பாடுகளை சிறப்பானவையாக மாற்றிக் கொள்ளத் தேவையான பொருத்தமான நடவடிக்கை எது என்பதை தீர்மானிப்பதற்கு ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குறைந்த நேரத்தையும் வளங்களையுமே அவ்வாறானவர்கள் பயன்படுத்துகின்றார்கள்’ என்று ஏ-ரேஞ்ச் நிறுவனத்தின் ஸ்தாபகர் டசுன் அபேசேகர தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனமொன்றின் அபாய நேர்வுத் தன்மையை குறைத்துக் கொள்ளும் விதத்தில் அதனது வியாபாரத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்கின்ற அதேநேரத்தில், அந்நடவடிக்கையின் பலாபலன்களை கண்டு பரிசீலனை செய்வதற்கும் குறித்த நிறுவனத்திற்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் ஏ-ரேஞ்ச் நிறுவனமானது தனது சீரமைத்தல் மற்றும் உற்பத்தித் திறன் மேம்படுத்தல் செயன்முறைகளை கட்டமைப்பு செய்திருக்கின்றது.

வியாபார முன்னேற்ற பகுப்பாய்வு, வியாபார தொழிற்பாடுகளை சீரமைப்புச் செய்தல், அறிவுசார் ஆவணப்படுத்துதல், கம்பனிகளின் ஆவணங்களை ஒப்புநோக்குதல், பொதுசனதொடர்பு தீர்வுகள், முறைமைகள் அபிவிருத்தி மற்றும் இணையத்தள வடிவமைப்பு போன்ற பல விடயங்கள் தொடர்பில் ஏ-ரேஞ்ச் நிறுவனம் சேவைகளை வழங்குகின்றது.

‘சாத்தியமான மேம்படுத்தல்களை மேற்கொள்ளும் எண்ணத்தோடு, தமது நிறுவனம்சார் கட்டமைப்பை (அல்லது அதன் குறைபாட்டை) மதிப்பீடு செய்து கொள்ளுமாறு நாம் வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு உறுதியாக சிபாரிசு செய்கின்றோம்.

அவர்களது தற்போதைய வியாபாரச் செயன்முறையை பகுப்பாய்வு செய்தல், முன்னேற்றத்தின் பொருட்டு சாத்திய வளமுள்ள விடயங்களை அடையாளம் காணல் மற்றும் மிகச் சிறப்பான இலாபத்தன்மையை பெற்றுக் கொள்ளும் விதத்தில் தமது நிறுவனங்களை சீரமைத்துக் கொள்ள அவர்களுக்கு உதவக் கூடிய மாற்று தீர்வு முறைமைகளை எடுத்துரைத்தல் போன்ற சேவைகளை எமது நிறுவனம் பொறுப்பேற்கின்றது.

அதுமட்டுமன்றி, தமது முறைமைகளை தர மேம்படுத்துவதற்காக மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் சீரமைத்தல் செயன்முறை ஒன்றை மேற்கொள்வதற்காக நிதிசார் தேவைக்கு முகம் கொடுக்கின்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி வசதிகளை அளிப்பதற்கும் ஏ-ரேஞ்ச் நிறுவனத்தால் முடியும்’ என்று அபேசேகர மேலும் குறிப்பிட்டார்.

வெற்றிகரமான சிறிய மற்றும் நடுத்தர முயற்சிகள் கூட அறிவு, நிபுணத்துவம் மற்றும் வளங்களையும் வணிகச் செயற்பாடுகளையும் செயற்றிறன்மிக்க விதத்தில் முகாமை செய்யும் உள்ளார்ந்த ஆற்றல் போன்ற விடயங்களில் பற்றாக்குறையுடன் இருப்பதன் விளைவாக, குறிப்பிட்ட காலமாக தத்தமது வளர்ச்சியில் எவ்வித மாற்றமும் இல்லாத நிலையில் செயற்படுகின்றன. வழிகாட்டலுடனான சீரமைத்தல் நடைமுறைகளின் மூலம் இவ்வாறான நிறுவனங்கள் தமது வளர்ச்சி வளையியை மேல்நோக்கி நகர்த்தும் விதத்தில் தம்மிடமுள்ள ஒன்றுதிரண்ட ஆற்றலில் கூடிய கவனம் செலுத்தி செயலாற்றக் கூடியதாக இருக்கும்.

அதிக எண்ணிக்கையிலான சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சிகள் – முறையான ஒரு நிறுவன கட்டமைப்பு, முறைமைகள் அல்லது செயன்முறைகள் இல்லாமலேயே ஆரம்பிக்கப்படுகின்றன. முதற்கட்ட வளர்ச்சி ஏற்படுகின்ற காலப் பகுதியில், மேலதிக ஊழியர்கள் வாடகை அடிப்படையில் சேவைக்கு அமர்த்தப்படலாம்.

அத்துடன் முகாமைத்துவ நெறிமுறைகள் மற்றும் வணிக செயன்முறைகள் வேலைத்தள பயிற்சி சேவை அடிப்படையில் மேற்கொள்ளப்படவும் முடியும். நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்ற போதும், ஒரு அல்லது பல முகாமைத்துவ வரிசைகள் அதிகரிக்கப்படுகின்ற வேளையிலும் – முறையான நிறுவனம்சார் கட்டமைப்பு, முறைமைகள் மற்றும் செயன்முறைகள் போன்றன பற்றாக்குறையாக காணப்படுமாயின், அதன் விளைவாக தொலைத் தொடர்பாடல் நெறிமுறைகளில் தெளிவான தன்மை மற்றும் அதிகார ஒப்படைப்பு போன்றவற்றில் தொடர்ச்சியாக ஒரு இழப்பு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். அடிப்படை உகந்த நிலையேனும் இல்லாதிருக்கும் ஒரு சூழலில் நிறுவனத்தை மேலும் விஸ்தரித்தால் கூட குறைவான வளர்ச்சிப் பெறுபேறுகளை பெற்றுத் தரக்கூடிய சாத்தியக்கூறுகனே அதிகமாக காணப்படுகின்றது.

ஏ-ரேன்ஞ்ச் ஸ்தாபகரான டசுன் அபேசேகர ஒரு தகவல் தொழில்நுட்ப (யிஹி) பட்டதாரியாவார். ஐக்கிய அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ விடயங்களில் 12 வருடங்களுக்கும் அதிகமான காலம் பணியாற்றிய அனுபவத்தை இவர் கொண்டுள்ளார். நிறுவனம் ஒன்றின் வேலைச் சூழலை சீரமைத்தல் மற்றும் அதன் பல்வேறு கூறுகளை ஒன்றுடனொன்று இடைத் தொடர்புபடுத்தல் போன்ற விடயப் பரப்புக்களில் தகவல் முறைமைகள் ஆற்றக்கூடிய முக்கிய வகிபங்கு தொடர்பிலேயே இவர் முதன் முதலாக முக்கியமான உள்ளார்ந்த பார்வையைச் செலுத்தியிருந்தார்.

எனவே, ஏ-ரேன்ஞ் சிறுவனத்தால் வழங்கப்படும் உற்பத்திகள் மற்றும் சேவைகள் மிகப் பொருத்தமான செயலாற்றலை வழங்கத் தக்கவையாக காணப்படும். சிறிய மற்றும் நடுத்தர நிறுவன துறையிலுள்ள நிறுவனங்களை நடாத்திச் செல்கின்ற இலட்சியமுள்ள மற்றும் ஆற்றலுள்ள தொழில் முயற்சியாளர்கள், தமது நிறுவனங்களை அடுத்த மட்டத்திற்கு கொண்டுசெல்ல வழியமைக்கும் முக்கியத்துவமிக்க தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான அறிவையும், வழிகாட்டலையும் வழங்கும் நோக்கிலேயே ஏ-ரேஞ்ச் (தி - rangலீ) நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.a-rangலீ.lk என்ற இணையத் தளத்தை பார்வையிடுங்கள் அல்லது 0718 308 070 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி