ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

நட்சத்திரங்கள் நனைந்து போன மழை நாட்கள்

நட்சத்திரங்கள் நனைந்து போன மழை நாட்கள்

நட்சத்திரங்கள் மழையில்

நனையாது என்று

காலா காலமாய் எழுதப்பட்டுள்ளது

நட்சத்திரங்களுக்கு கீழே

மழை பெய்வதாகவும்

நட்சத்திரங்கள் தொலைவிலுள்ளதாகவும்

கூறப்படுகிறது.

காலத்துள் ஆய்வுகள்

நடக்கின்றன

மழையில் நனைந்த

கற்கள்

கலந்துரையாடுகின்றன

யாரும் நிரூபிக்க முடியாமல்

நட்சத்திரங்கள்

அழகாய் இரவை அலங்கரிக்கின்றன

பகலில் தெரிவதில்லை

சூரியனிடத்திலான ஒப்பந்தங்களால்

மறைக்கப்பட்டுள்ளன

அடை மழையில்

வெள்ளம் ஓடுகிறது

அணைகள் உடைப்புடைந்து

நீர் ஓடுகிறது

அப்போதும்

நட்சத்திரங்கள் அழகாய்

எப்போதும் மின்னுகிறது

மழையில் நனையாது என்று

எல்லாம் சொல்லப்படுகிறது

நட்சத்திரங்களின்

வாழ்வில் உச்சம் முடியும்

போது

அது எரிந்து

பூமியில் விழும்போது

மழையில் நனைவது

நட்சத்திரங்களுக்கும்

சிலருக்கும்

கடைசியில் புரிந்தது

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி