ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
பக்தாத்தில் உணவகத்தின் மீது தற்கொலை தாக்குதல்; 37 பேர் பலி

பக்தாத்தில் உணவகத்தின் மீது தற்கொலை தாக்குதல்; 37 பேர் பலி

ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உணவகம் மீது நேற்று முன்தினம் மனித வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 37 பேர் பலியாகினர்.

பக்தாத்தில் உள்ள அமில்நகர் பகுதியில் ஷியா பிரிவினருக்கு சொந்தமான உணவகம் உள்ளது. மாலை வேளைகளில் இந்த உணவகம் மற்றும் பக்கத்தில் உள்ள பழரச கடையில் வாடிக்கையாளர்கள் நிரம்பி வழிவது வழக்கம்.

நேற்று முன்தினம் இந்த உணவகத்தில் பரபரப்பான வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இச்சம்பவத்தில் 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

படுகாயமடைந்த மேலும் 45 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் வீட்டை குறிவைத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் அந்த அதிகாரியின் தந்தை, சகோதரர் மற்றும் 5 உறவினர்கள் என மொத்தம் 7 பேர் பலியாகினர்.

மேலும் ஒரு சம்பவத்தில், ரவாநகரில் பொலிஸ் சீருடையில் வந்த தற்கொலை படை தீவிரவாதி பொலிஸார் மீது நடத்திய தாக்குதலில் 3 பொலிஸ் அதிகாரிகள் பலியாகினர். தற்கொலை படையை சேர்ந்த 5 தீவிரவாதிகள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கடந்த 20 நாட்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு இதுவரை சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 10 மாதங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]