ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
1912ல் அட்லான்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் வயலின் 9 கோடிக்கு ஏலம்

1912ல் அட்லான்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் வயலின் 9 கோடிக்கு ஏலம்

கடந்த 1912ல் அட்லான்டிக் கடலில் மூழ்கி 1500 பேர் இறந்த டைட்டானிக் கப்பலில் இசைக்கப்பட்ட பழம்பெரும் வயலின் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

பிரிட்டனில் உள்ள சவுதாம்ப்டன் பகுதியில் இருந்து 1912ல் ஏப்ரல் 15 ஆம் திகதி நியூயோர்க் புறப்பட்ட டைட்டானிக் சொகுசு கப்பல் தன் முதல் பயணத்தை ஆரம்பித்தது. அதுவே சோகமாக முடிந்தது. சொகுசு கப்பல், அட்லான்டிக் கடலில் பனிப் பாறைகளில் சிக்கி மூழ்கியது. இதில் 1500 பேர் இறந்தனர்.

இந்த கப்பலில் பேண்டு இசைக் குழுவினர் இசைத்த வயலின் சமீபத்தில் லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. ஹென்ரி ஆல்ரிட்ஸ் நிறுவனத்தில் நடந்த இந்த எலத்தில் 9 கோடி ரூபாய் கொடுத்து கோடீஸ்வரர் ஒருவர் ஏலம் எடுத்தார். டைட்டானிக் கப்பலில் பேண்டு இசைக் குழு நடத்தியவர் வாலஸ் ஹார்ட்லி.

ஜெர்மனி தயாரிப்பான இதை அவர் காதலி மரியா திருமண நிச்சயத்தின் போது பரிசாக தந்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த வயலின் கண்டுபிடிக்கப்பட்டு ஏல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதுவரை யாரிடம் இருந்தது என்ற விவரம் கிடைக்கவில்லை. வயலின் பெரிய அளவில் உருக்குலையாமல் அப்படியே இசைக்கும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]