ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளில் மிஹிலிய, ரவிந்து சம்பியனாக தெரிவு

ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளில் மிஹிலிய, ரவிந்து சம்பியனாக தெரிவு

அண்மையில் நடைபெற்ற 24 ஆவது வருடாந்த ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் “நவீன் பியதிஸ்ஸ” சவால் கிண்ணத்தை ரவிந்து லக்சிறியும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவின் “நிராஷா குருகே” சவால் கிண்ணத்தை மிஹிலிய மெத்சரணியும் வென்றனர்.

ரவீன் நாணயக்கார மற்றும் வசுந்தரா சுவாரிஸ் ஆகியோர் முறையே போட்டித் தொடரின் அதிசிறந்த ஆண் மற்றும் பெண் விருதினை வென்றனர். இப் பரிசளிப்பு நிகழ்வானது சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகேவின் ஆதரவின் கீழ் நடை பெற்றது.

இப் பரிசளிப்பு நிகழ்வில் சிலோ பிஸ்கட்ஸ் லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவரும், குழும பணிப்பாளருமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில், “தொடர்ச்சியாக 6 ஆவது ஆண்டாக கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை வழங்கியதையிட்டு பெருமையடைகிறோம்.

குழந்தைகளுக்கு தமது முழு திறமையையும் வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பினை வழங்கியது எமது பாக்கியமாகும். இளம் ஸ்கொஷ் வீரர்களிற்கு சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்துவதற் கான மைல்கல்லாக இப்போட்டிகள் விளங் குகிறது” என்றார்.

“இப்போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி வழங்கிய அனுசர ணையை பாராட்டு கிறோம். இறுதிப் போட்டி களில் பங்கேற்ற அனைத்து வயதுப் பிரிவினரும் மிகவும் போட்டித் தன்மையுடன் விளை யாடியதுடன், நான்கு மற்றும் ஐந்து பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன” என ஷிழிஷிபி இன் தலைவர் கொமடோர் பாலித வீரசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ரிட்ஸ்பரி தேசிய கனிஷ்ட ஸ்கொஷ் போட்டிகள் இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு தமிழ் யூனியன் விளை யாட்டரங்கில் இடம் பெற்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]