ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
விளையாட்டு சட்ட விதிமுறைகளுக்கு

பாடசாலை விளையாட்டு சங்கங்கள்

விளையாட்டு சட்ட விதிமுறைகளுக்கு

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் விளையாட்டுச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்படுத்துவது கட்டாயமென கல்வி அமைச்சும், விளையாட்டு அமைச்சும் தெரிவித்துள்ளன.

தேசிய, பாடசாலை விளையாட்டுக் சங்கங்களுக்கு இடையில் விரிவான ஒத்துழைப்பை கட்டியெழுப்பும் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது.

அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்தன ஆகியோரும், பாடசாலை மற்றும் தேசிய விளையாட்டுக் சங்கங்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் நிலவும் நெருக்கடி நிலைமை விளை யாட்டுத்துறைக்கு தடையாகவுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் ஷரத்துக்களுக்கு ஏற்ப விளையாட்டு மேம்பாட்டுக்காக பாடசாலை விளையாட்டுச் சங்கங்கள் செயற்படுவது கட்டாயமென வலியுறுத்தப் பட்டது.

தேசிய விளையாட்டை மேம்படுத்த புதிய வேலைத் திட்டமும் அமுலாகும். இதன்பிரகாரம் பாடசாலை வி¨ளாயாட்டுக் கழகங்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் செயற்பட முடியாது. தேசிய விளையாட்டுக் கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு ஏற்ப பாடசாலை விளையாட்டுக் கழகங் கள் செயற்பட வேண்டுமென்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அண்மைக் காலங்களில் சில பாடசாலை விளையாட்டுச் சங்கங்கள் கல்வி அமைச்சின் உத்தரவுக்கு அப்பால் செயற்பட்டுள்ளன.

அத்தகைய சம்பவங்களைத் தவிர்த்து பாடசாலை மற்றும் தேசிய விளையாட்டுக் சங்கங்களுக்கு இடையில் நீண்ட கால திட்டமிட்ட வேலைத் திட்டத்தின் கீழ் விளையாட்டை முன்னேற்றுவது சகல தரப்பினரின் பொறுப்பாகுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. (எப். எம்.)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]