ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,22, 2013

Print

 
குச்சி மிட்டாய் பிறந்த கதை

குச்சி மிட்டாய் பிறந்த கதை

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மிட்டாய்கள் (விanனீiலீs) மிகவும் பெரியதாக இருந்தன. குழந்தையின் வாய்க்குள் செல்வது ஆபத்தை விளைவிப்பதாக இருந்தன. காகிதம் சுற்றப்படா மல் விற்கப்பட்டதால் அவை ஒழுகி உடை, முகம், விரல்கள் எல்லாவற்றிலும் ஒட்டிக்கொண்டு அசுத்தப்படுத்தின.

இதனால் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு அவற்றை வாங்கித் தரவில்லை. கன்னெக்டிகட்டைச் சேர்ந்த ஜீயார்ஜ் ஸ்மித் மிகவும் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டார். மிட்டாயை ஒரு குச்சியில் பொருத்தினார்.

அந்தக் காலத்தில் புகழ் பெற்று விளங்கிய பந்தயக் குதிரையான லாலிபாப் என்ற பெயரை இந்த மிட்டாய்க்குச் சூட்டினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]